முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

குடைமிளகாய் ஃபிரை &வாழைக்காய் ஃப்ரை & பாகற்காய் ஃபிரிட்டர்ஸ்

  குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.  வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...

கேசரி போளி & சர்க்கரைவள்ளி கிழங்கு சுகியன்

 கேசரி போளி 100 கிராம் ரவை சக்கரை-ஒன்றரை கப், - 130 மில்லி கோரிப்பவுடர் 1 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அகலமான பாத்திரத்தில் மைதாமாவுடன் கோரிப்டவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ரவையை நெய்யில் வறுத்து, ஒரு பங்கு ரவைக்கு இருபங்கு அளவு தண்ணீரை வாணலியில் ஊற்றி, வறுத்த ரவையைத் தூவி கிளறவும். இதனுடன் கேசரிப்பவுடர், சர்க்கரை, நெய் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும், பிசைந்த மைதாமாவை சிறிய சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நெய் தடவிய வாழை இலையில் இந்த உருண்டையை வைத்து, வட்டமாகத் தட்டி, ரெடியாக வைத்துள்ள கேசரியை இதனுள் சிறிது வைத்து மூடி, மறுபடியும் வட்டமாகத் தட்டவும். இந்த போளிகளை நெய் தடவிய தவாவில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து சுற்றிலும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் சர்க்கரைவள்ளி கிழங்கு  சுகியன் தேவையானவை: மைதாமாவு - 100 கிராம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு 4. பொடித்த வெல்லம் 100 கிராம். எண்ணெய் - 250 மில்லி, ஏலக்காய்தூள் சிறிதளவு.    செய்முறை: சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் ...

காரப் பணியாரம் & ஆரஞ்சு பணியாரம்

 தேலையானவை: வெந்தயம் அரிசி - தலா 100 கிராம் நெய் 100 மில்லி மிளகு - 10, பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன்பச்சை மிளகாய் - உப்பு - தேவையான அளவு.  செய்முறை :அரிசி, வெந்தயம் இரண்டையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து கொள்ளவும். இதனுடன் மிளகு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மாவை சிறு கரண்டியில் எடுத்து நெய் தடவிய பணியாரக் கல்லில் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். மாவு அரைக்கும் போது சிறிதளவு தேங்காய் சேர்த்தும் அரைக்கலாம். சுவையும் வித்தியாசமாக இருக்கும். காரப் பணியாரம் ஆரஞ்சு பணியாரம்  தேவையானவை:  பொடியாக  இட்லி அரிசி - 200 கிராம், வெந்தயம் 1 டீஸ்பூன், உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன், ஆரஞ்சுப்பழம் 1.நெய் 100 மில்லி.  செய்முறை: இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தோல் உறித்து விதை நீக்கிய ஆரஞ்சுப்பழத்தை விழுதாக அரைத்து மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பணியாரக் கல...

அரிசி-பருப்பு வடை & அரிசி பாயசம்

 தேவையானவை: இட்லி புழுங்கலரிசி, பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - தலா 1 கப், தனியா - 1 டீஸ்பூன், துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - சிறிய துண்டு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரிசி-பருப்பு வடை  செய்முறை:  அரிசி பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி, தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் நீரை வடித்து அதனுடன் தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக் கெட்டியாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கொக் மல்லித்தழை, பொடியாக நறுக்கிய வெற்சிைம் உப்பு சேர்த்து ஒரு சுற்று விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெயை காய விடவும். பிசைந்து வைத்துள்ள கலவையை மெல்லிய வடையாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுக்கவும் மாவை அரைத்தவுடன் வடை செய்துவிடவும். அப்படி இல்லாவிட்டால் மாவு புளித்துவிடும்.  தேவையானவை:  பச்சரிசி, வேகவைத்த கடலைப்பருப்பு தலா 1 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 கப், மு...

Veg உசிலி & பருப்பு துவையல்

 தேவையானவை: நறுக்கிய பீன்ஸ் ஒரு கப், துவரம் பருப்பு - கால் கப், கடலைப் பருப்பு - முக்கால் கப், காய்ந்த மிளகாய் 4, கறிவேப்பிலை, கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து வடித்து மிக்ஸியில் போடவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். இந்த மாவுக் கலவையை சிறிய வடைகளாக தட்டி, ஆவியில் வேக வைத்து தனியாக வைக்கவும். பீன்ஸையும் தனியாக வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வேகவைத்த வடைகளை உதிர்த்து போட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த பீன்ஸ், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பீன்ஸுக்கு பதிலாக கொத்தவரை (அ) வாழைப்பு (அ) முட்டைகோஸில் கூட இதே முறையில் உசிலி செய்யலாம்.     பருப்பு துவையல்  தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப் தனியா 5 டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்தமிளகாய் - 6, வெல்லம், புவி, பெருங்காயம் - சிறிதளவு உப்பு, எண்ணெய் - தேவையானவை  செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சித்து...

வெங்காய சாம்பார் & வேர்க்கடலை சட்னி

  தேவையானவை:  பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் 1 கப், காய்ந்த மிளகாய் - 1, பச்சைமிளகாய் 2, வெல்லம் - சிறிதளவு, புளிக்கரைசல், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.  செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.        வேர்கடலை சட்னி தேவையானவை வறுத்த வேர்க்கடலை 1 கப் நறுக்கியது. புனிக் கரைசல் - 1 டீல்பூன் மிளகாய்த் தூள் அரை டீஸ்பூன் எண்ணெய்:உப்பு - தேவையான அளவு  செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு அதில் வேர்க்கடலை, மிளகாய்த்தூள் .உப்பு.புளிக் கரைசல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் ஆறியதும் மையஅரைக்கவும் . பிறகு சட்னியில் கடுகு,  கருவேப்பிலை தாளிக்கவும். வேர்கடலை  சட்னி ரெடி

பயத்தம் பருப்பு சூப் & பாசிப்பருப்பு அல்வா

 பயத்தம் பருப்பு சூப் : வாணலியில் நெய் விட்டு உருகியதும், பட்டை, கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி, பருப்பு தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவி, இறக்கி பரிமாறவும்.        பாசிப்பருப்பு அல்வா தேவையானவை: பாசிப்பருப்பு, பால் தலா ஒரு கப், நெய் - கால் கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பாதாம், முந்திரி - தேவையான அளவு. செய்முறை: பாசிப்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து களைந்து மிக்ஸியில் போடவும். தண்ணீர் விடாமல் பேஸ்ட் போல அரைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு பாதாம், முந்திரியை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அதே நெய்யில் பாசிப்பருப்பு விழுதை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து நன்றாக கிளறி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம், முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

ஆலூ ரஸ் & புளி இஞ்சி

 தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, மஞ் சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.  அரைக்க: தனியா ஒரு டேபிள்ஸ்பூன்,, சீரகம் - அரை டேபிள்ஸ்பூன் பட்டை - 1 பெரிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய்  2, மிளகு - 6.  செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி வைத்துக் கொள்ளவும். அரைக்க  கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, பொடிக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த பொடியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் போட்டு மூடி வைத்து நன்கு வேகவிடவும்,                             புளி இஞ்சி  தேவையானவைப: கெட்டியான புளிக் கரைசல் 1 கப், பச்சை மிளகாய் 10, இஞ்சித் துருவல் கப், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் - ½ கடுகு - 1 ஸ்பூன், வெல்லம் - நெல்லிக்காய் அளவு, ...