முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

பட்டாணி பன்னீர் மசாலா

            1 கப் பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை  பொடியாக நறுக்கி சேர்க்கவும் .தக்காளி 3 சிறிதாக அரிந்து சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு.1ஸ்பூன் மல்லித் தூள் .கரம் மசாலா அரை டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து வதக்கவும் .அதனுடன் வேக வைத்த பட்டாணி. பன்னீர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு கிளறவும். 10 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும். அதை 5 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் ஒரு பாத்திரத்தில் மாற்றவும் பட்டாணி பனீர் மசாலா ரெடி

கார்லிக் நாண்

  கார்லிக் நாண் நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பட்டாணி பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.

பாதாம் முந்திரி லட்டு எப்படி செய்வது வாங்க

 பாதாம் 200 கிராம். முந்திரிப் பருப்பு 200 கிராம். பாசிப் பருப்பு 50 கிராம். பொட்டுக்கடலை 50 கிராம். நெய் 150 கிராம். ஏலக்காய் 10 கிராம் பருப்பு வகைகள் அனைத்தையும் லேசாக வறுக்கவும். மிக்ஸி ஜாரில் நைஸாக பொடி செய்துக்கொள்ளவும். அதனுடன சீனி.500 கிராம். ஏலக்காய் 10 கிராம் நைஸாக பொடித்து கலந்து பிறகு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் 4.5 முந்திரிப்பருப்பை சின்ன சின்னதாக நறுக்கி. நெய்யில் வறுத்து இந்த மாவுடன் கலந்து விடவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடித்து. லட்டுகளாக செய்யவும். பாதாம்.முந்திரி லட்டு ரெடி.

மஸ்ரூம் மசாலா

  மஸ்ரூம் 250 கிராம் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (ஒரு அகலமான பாத்திரத்தில் 3.தண்ணீர் விட்டு அதில் 1ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மஸ்ரூம் ஐ அலசிவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டு10 நிமிடம் மூடி வைக்கவும்.பிறகு அதிலுள்ள கருப்பாக இருக்கும் பகுதிகளை  நீக்கிவிட்டு சுத்தம் செய்து தட்டில் வைத்துக் கொள்ளவும்)அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள். அரை டீஸ்பூன் மிளகுத்தூள்.கலந்து வைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து. எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும். பட்டை .கிராம்பு. ஏலக்காய் பொடி செய்து.அதில் தூவவும் வாசனை நன்கு வரும் போது‌ வெங்காயம் 4 சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 2 பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். மல்லித் தூள் அரை டீஸ்பூன். பிறகு நாம் கலந்து வைத்திருக்கும் மஸ்ரூம்  இதனுடன் சேர்த்து. சிறிதளவு உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை ஆப் நிறுத்தவும்.பின்புஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதன...

முட்டைக்கோஸ்குருமா

  முட்டைக்கோஸ்குருமா தேவையானவை: முட்டைக்கோஸ் ஒரு கப், எண்ணெய் - 10 டேபிள் ஸ்பூன், சிறியதாக நறுக்கிய உருளைக்கிழங்கு 4 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம், பிரிஞ்சி இலை - தலா ஒன்று, சீரகம் ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பட்டை - சிறிய துண்டு, மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த்துருவல் - கால் கப், பச்சைமிளகாய் - 2, கசகசா - அரை டீஸ்பூன், தக்காளி - ஒன்று. செய்முறை: நறுக்கிய முட்டைக்கோஸுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை பொரித்து, தனியே வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கி, வெந்த முட்டைக்கோஸைச் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் அரைத்த விழுதைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு, பொரித்த உருளை, கொத்துமல்லித்தழை சேர்த்து இறக்கவும். குறிப்பு: சப்பாத்தி / பூரி / ரொட்டிக்கு ஏற்றது. வெள்ளை' குருமா தேவையானவை: நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் (மூன்றும் சேர்த்து) - ஒரு கப், பச்சைப்பட்டாணி - கால் கப், உப்பு - தேவைக்கு,...

கார்லிக் நாண்

  நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.

சாப்பாடு ரெடி. சாதம் .முருங்கைக்காய் சாம்பார்.கீரை கூட்டு. உருளைக்கிழங்கு காரம் தக்காளிரசம். சூப்பரான மதிய சாப்பாடு ரெடி எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்

  முருங்காய் சாம்பார் . பருப்பு 1 கப் வேகவைத்து தனியாக எடுத்து வையுங்க‌ (துவரம்பருப்பு நன்றாக வேகவைத்து குழைவாக இருக்க வேண்டும்)முருங்காய்யை சிறிய சிறியதாய் நறுக்கி வைத்துக்கவும். வெங்காயம்1தக்காளி 2 சிறிதாக வெட்டி வைத்துக்கவும்.புளி தண்ணீர் சிறிது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் 3 ஸ்பூன் விட்டு காய்ந்ததும் கடுகு. உபருப்பு சிறிதளவு கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி வெங்காயம் தக்காளி இவை அனைத்தும் சேர்த்து எண்ணையில் வதக்கி.புளி தண்ணீர் சேர்த்து உப்பு.சாம்பார் மிளகாய்தூள் (இவைகளை உங்களுக்கு தேவையான அளவு)காரம் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு நாம் வேக வைத்த பருப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வையுங்க. முருங்க்காய் வெந்ததும் இறக்குங்க பிறகு மல்லித்தழை பெருங்காயத்தூள் சேர்த்திடுங்க முருங்கக்காய் சாம்பார் ரெடி. பிறகு ஈசியான உருளைக்கிழங்கு காரம் குக்கர் அருப்பில் வைத்து 3.ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு. வெங்காயம் இரண்டு நைசாய் நறுக்கி கடுகுடன் சேர்த்து ஒன்றாக வதக்குங்க. வதங்கும் போதே உருளை தோல் சீவி சின்ன சின்னதாய் கட் செய்து வெங்காயத்துடன் சேருங்க.மிளகாய்த் தூள் ...

மீல்மேக்கர் குழம்பு எப்படி செய்வது

 பிரஷர்பான்அடுப்பில் வைத்து. 2ஸ்பூன் எண்ணைய் விடுங்க. காய்ந்ததும் பிரிஞ்சி இலை.  பட்டை.  2 வெங்காயத்தை நைசாக நறுக்கி அதில் சேர்த்து வதக்குங்க.  4 தக்காளி நைசாக நறுக்கி வதக்கவும்.  இஞ்சிபூண்டு1டீஸ்பூன்.  தக்காளியுடன் சேர்த்து வதக்குங்கள் வெண்ணீரில் மீல்மேக்கரை 5 நிமிஷம் போட்டு பிழிந்து மீல்மேக்கரை போட்டு வதக்குங்க.  தேவையான அளவு உப்பு..மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் மிளகாய்த்தூள் சேர்த்து10நிமிடம் கொதிக்கவிடுங்க.பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி வையுங்க.மீல்மேக்கர் குழம்புரெடி.

பெசரட்டு & ஈசி சாம்பார் பத்து நிமிடத்தில் ரெடி

  பயத்தம்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து.பருப்பை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து.பிறகு மிக்ஸியில் உங்களுக்கு தேவையான அளவுக்கு பச்சைமிளகாய் சிறிது இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைக்கல் அடுப்பில் போட்டு தோசை ஊற்றி அதன் மேல் சிறிது நைசாக அறிந்து வெங்காயம் சேர்த்து. ஒரு பக்கம் மூடி எடுத்தால் பயறு தோசைரெடி. தேங்காய்சட்னி அல்லது தக்காளிசட்னியும்  சாப்பிடலாம். ஈசி சாம்பார் பத்து நிமிடத்தில் ரெடி   குக்கரை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 4 ஸ்பூன் விடுங்க. காய்ந்ததும் கடுகு. சீரகம். வெங்காயம் நறுக்கியது 2. எல்லாத்தையும் வதக்குங்க பிறகு மிக்ஸி ஜாரில் 4 .தக்காளி.  கத்தரிக்காய் 1  லேசாக அடிங்க. பின் வதங்கிய வெங்காயத்துடன் கலந்து. மிளகாய் தூள் 2 ஸ்பூன். மல்லித் தூள் 1 ஸ்பூன். தேவையானளவு உப்பு. தண்ணீர் .தோசை மாவு 2 ஸ்பூன் (இல்லையென்றால்) கடலை மாவு 1 ஸ்பூன் அதில்   கரைத்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்க. இந்த ஈசி சாம்பார் ரவா தோசை. கோதுமை தோசை. இட்லி. எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். பத்...

முந்திரி மசாலா

  முந்திரி -100 கிராம்.பச்சை பட்டானி -அரை கப்.வெங்காயம்- 2 .தக்காளி- 2-தேங்காப் பால் அரை கப். .எண்ணைய் 2 ஸ்பூன் .தேவையான அளவு உப்பு . மிக்ஸியில் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்.மல்லித்தூள் -1ஸ்பூன் இஞ்சி. பூண்டு சிறிது(இது தனியாக அரைக்கவும்) பிறகு முந்திரி 7.வெள்ளரி விதை 2அரை ஸ்பூன் கசகசா சேர்த்து( தனியாக அரைக்கவும்) பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு நறுக்கிய வெங்காயம். தக்காளி வதக்கவும்  பின்பு மிளகாய்த்தூள்.மல்லித்தூள்(சக்தி மசாலா) .இஞ்சி.பூண்டு(அரைத்த)சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். பிறகு முந்திரி  பின்பு அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து பிறகு தேங்காய் பால். உப்பு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்  பிறகு கரமசால் தூவி இறக்கவும்.இப்ப முந்திரி மசாலா ரெடி

கட்லெட்& வெஜ் வடை எப்படி செய்யலாம்.

 உருளைக்கிழங்கு. கேரட்கோஸ்.பின்புடலங்காய் இவையனைத்தயும்நைசாக.துருவி இஞ்சி.பச்சைமிளகாய்.2.கடலைமாவு.ஸ்பூன் உருளைக்கிழங்குவேகவைத்துமசித்துக்கொள்ளவும் எல்லாக்காய்களையும்.சேர்த்துபிசைந்து தேவையானஉப்பு.காரம்சரிபார்த்துமல்லித்தழை சேர்த்து.பிறகு அடுப்பை பற்றவைத்து. 200 கிராம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடைகளாக செய்து பொரித்து எடுக்கவும். வடை ரெடி. பிறகு கட்லெட் இதே வெஜ்கலவையுடன். சிறிதுகரமசால்.சோம்பு பொடித்து ரஸ்க் அல்லது பிஸ்கட் (மேரி) 2 சேர்த்து. இந்த வெஜ் கலவைகளை கட்லெட்களாக செய்யவும். (இதில் உப்பு காரம். அவை அனைத்தும் உங்கள் விருப்பம் தான்)

காரப்பொரி & இனிப்பு பொரி கார்த்திகை ஸ்பெஷல்

  காரப்பொரி 2 கப் பொரி அடுப்பை பற்ற வைத்து. வாணலியில் இந்தப் பொரியை கரகரப்பாக வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு. வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு.ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது 4 காய்ந்த மிளகாய்.கருவப்பிலை. மஞ்சளதூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையான அளவு பிறகு பொடி செய்து வைத்திருக்கும்.மிளகு சீரகப்பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொரியையும் சேர்த்து.எல்லா பொரியிலும் உப்பு.காரம்கசேர்ந்து கரகரப்பாக இருக்கும் போது.பாத்திரத்தில் மாற்றவும்.காரப்பொரி ரெடி. (உப்பு.காரம் உங்களுக்கு தேவையான அளவு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்).      இதேபோல் அவல் பொரிப்பொறி. சோளப்பொறி(இவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சுத்தம்செய்து தரமானதாக கிடைக்கும் அதனை வாங்கி நம்முடைய விருப்பத்தின் போல் மொரமொரப்பாக) வறுத்துக் கொள்ளலாம். அனைத்திற்கும்.உப்பு. காரம் உங்களுடைய விருப்பம் போல் சேர்க்க வேண்டும். இனிப்பு பொரி  பொரி ஒரு கப்( நெல் பொரி அல்லதுஅவல் பொரி) அடுப்பை ஆன் பண்ணுங்...

சப்பாத்தி & இடலிக்கு "கடப்பா " எல்லா வகையான உணவுகளுக்கும் தொட்டு சாப்பிடலாம்

  உருளைக்கிழங்கு.கேரட்.பின்ஸ். பட்டாணி. தக்காளி 3 இவையெல்லாம் சேர்த்து ஒருகப். பயத்தம்பருப்பு 1கப ் இவற்றை குக்கரில் போட்டு 4 கப்தண்ணீர்.ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து வேகவைக்கவும்.பிறகு 4ஸ ்பூன் தேங்காய் துருவி மிக்ஸி ஜாரில்போடுங்க.அதனுடன் 2 ஸ்பூன் போட்டுக்கடலை. பட்டைகிராம்பூ.ஏலக்காய். பச்சைமிளகாய் 5 (காரத்திக்கு ஏற்றார்போல்)) இவற்றை மிக்ஸி ஜாரில் நைசாகஅரைத்து.குக்கரில் நாம் வைத்திருக்கும் பருப்புடன் சேர்த்து. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மல்லித்தழை. கருவேப்பிலை போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சூப்பரான கடப்பாரெடி.இட்லி.தோசை.சப்பாத்தி.பூரி. ரவாதோசை.கோதுமை தோசை எல்லா வைகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

மல்லி-பனீர் ஃப்ரை&மல்லி-பனீர்-சன்னா சாலட்&மல்லி-பிரெட் டோக்ளா

  மல்லி-பனீர் ஃப்ரை பனீர் துண்டுகள் - ஒரு கப், கொத்துமல்லித்தழை, புதினா - தலா ஒரு கைப்பிடியளவு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. கொத்துமல்லி, புதினா இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். அதனுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சற்று எண்ணெய் கூடுதலாக விட்டு, பனீர் துண்டுகள், அரைத்த கொத்துமல்லி விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கி, சப்பாத்தியுடன் பரிமாறவும். மல்லி-பனீர்-சன்னா சாலட் தேவையானவை: கொண்டைக்கடலை ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், உருளைக்கிழங்கு, கேரட், வெங்காயம் - தலா ஒன்று, கொத்துமல்லித்தழை - ஒரு கப், எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. செய்முறை: கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் வேகவைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கையும் வேக வைத்து தோலை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட்டை தண்ணீரில் நன்றாக கழுவி துருவிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பனீர் துண்டுகள், வெங்காயம், கேரட் துருவல், ...

பன்னீர்பட்டர் மசாலா

   வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு  அரை ஸ்பூன் சீரகம் வெங்காயம்  4  தக்காளி  4 ( சிறிதாக நறுக்கவும் )சேர்த்து வதக்கவும். பின்பு  மிக்ஸியில் நைசாக அறைக்கவும். மசாலா ரெடி.  பிறகு வாணலியை அடுப்பில் வைத்து  வெண்ணை 100 கிராம் போட்டு அதில் கரமசால் பவுடர்  அரை ஸ்பூன். மஞ்சத்துள் அரை ஸ்யூன். மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தேவையானளவு உப்பு சேர்த்து. பன்னீர் 100 கிராம் அளவு  சிறிய துண்டுகளாக  கட் செய்யவும்.(டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ல ஐஸ் க்யூப் மாதிரி பன்னீர் வந்து கியூப் இருக்கும் அதையும் யூஸ் பண்ணலாம்)மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில்  வைத்து இறக்கவும் .இப்ப  பன்னீர் பட்டர் மசாலா ரெடி. 

பூண்டு மசித்த குழம்பு &சின்ன வெங்காயக்குழம்பு &சிறுகீரைக் குழம்பு&அவிச்சகுழம்பு

  பூண்டு மசித்த குழம்பு  தேவையான பொருட்கள் பூண்டு - 1/2 கப், சின்னவெங்காயம்-6, மிளகாய் வற்றல்- 6, புளி-2 டேபிள் ஸ்பூன், வெல்லம் சிறிது. சீரகம்-கடுகு, வெந்தயம்-தலா 1/2 டீஸ்பூன். செய்முறை மிளகாயை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு. வெங்காயம் வதக்கி அரைக்கவும். புளியைக்கரைத்து இத்துடன் அரைத்த விழுது, பொடி செய்த மிளகாய், வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். கடைசியாக சீரகம், கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும். இந்தக் குழம்பில் முழுப்பூண்டும். சேர்க்கலாம். சின்ன வெங்காயக்குழம்பு  தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம்- கப், பூண்டு-8 ஒரு பல், புளிப்பேஸ்ட்- 2 டேபிள்ஸ்பூன், தக்காளி-2, மிளகாய் வற்றல் - 6, தனியா-2 டீஸ்பூன், வெந்தயம்-1/2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், தே.துருவல்- 1/4 கப், கடுகு-1/2 டீஸ்பூன். செய்முறை வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளியை வதக்கவும். மிளகாய், தனியா, வெந்தயம், இஞ்சி, தே.துருவலை வறுத்து அரைக்கவும். வதக்கிய பொருட்களுடன் புளிபேஸ்ட், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தபின் அரை...