காரப்பொரி
2 கப் பொரி அடுப்பை பற்ற வைத்து. வாணலியில் இந்தப் பொரியை கரகரப்பாக வறுக்கவும்.பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு. வெறும் வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு.ஒரு ஸ்பூன் சீரகம் வறுத்து நைசாக மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தது 4 காய்ந்த மிளகாய்.கருவப்பிலை. மஞ்சளதூள் அரை டீஸ்பூன். உப்பு தேவையான அளவு பிறகு பொடி செய்து வைத்திருக்கும்.மிளகு சீரகப்பவுடர் மூன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி பொரியையும் சேர்த்து.எல்லா பொரியிலும் உப்பு.காரம்கசேர்ந்து கரகரப்பாக இருக்கும் போது.பாத்திரத்தில் மாற்றவும்.காரப்பொரி ரெடி. (உப்பு.காரம் உங்களுக்கு தேவையான அளவு ஒரு ஸ்பூன் நெய்யும் சேர்த்துக் கொள்ளலாம்). இதேபோல் அவல் பொரிப்பொறி. சோளப்பொறி(இவை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் சுத்தம்செய்து தரமானதாக கிடைக்கும் அதனை வாங்கி நம்முடைய விருப்பத்தின் போல் மொரமொரப்பாக) வறுத்துக் கொள்ளலாம். அனைத்திற்கும்.உப்பு. காரம் உங்களுடைய விருப்பம் போல் சேர்க்க வேண்டும்.
இனிப்பு பொரி
பொரி ஒரு கப்( நெல் பொரி அல்லதுஅவல் பொரி) அடுப்பை ஆன் பண்ணுங்க. வாணலியை அடுப்பில் வைத்து மொரமொர என பொரியை சூடு செய்து பாத்திரத்தில் வைத்து விடுங்கள். பொட்டுகடலை. எள்ளு. தேங்காய் துருவி சிவக்க வறுத்து பொரியுடன் சேருங்கள் .2கப் வெல்லம் சுத்தம் செய்து பாகு காய்ச்சி. (ஒரு தட்டில் தண்ணீர் வைத்து காய்ச்சிய பாகுவை அதில் விடுங்க அந்த வெல்லம் கையில் எடுக்கும் போது. பந்து போல் உருண்டு வரும் ) வெல்லப்பாகு எடுத்து பாத்திரத்தில் வைத்துள்ள பொரியுடன் சேருங்கள். நல்லா கிளறி சூடு ஆறுவதற்க்குள்.அரிசி மாவு தொட்டு உருண்டைகளாக பிடித்து அடிக்கடி வைக்கவும். (பொரி ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க வராது அப்படி இல்லை என்றால் சூடாக இருக்கும்போதே பொரியை அழுத்தி மூடி வைக்கவும்) கார்த்திகை பொரி ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக