பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
சன்னா ஜிலேபி தேவையானவை: மைதா, துருவிய பனீர் - தலா 1 கப், உப்பு - சிட்டிகை, ஆப்ப சோடா - கால் ஸ்பூன், சர்க்கரை - 1 கப் + கால் கப், ஃபுட் கலர் (லெமன் நிறம்) - சிட்டிகை, பால் - 1 லிட்டர், பாதாம் - 10, நெய் - பொரிக்க தேவையான அளவு. செய்முறை: மைதா, துருவிய பனீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக எடுத்து, நீள வடிவில் செய்து மடித்து, வட்டமாக வளையல் போல செய்து, சூடான நெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர், ஃபுட் கலர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 1 கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இந்தப் பாகில், பொரித்த ஜிலேபிகளை முக்கி எடுத்து, தட்டு அடுக்கவும். பாலை ஒரு கப் அளவு கண்டக் காய்ச்சி, ஊறவைத்து அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து கலந்து, ஜிலேபிகளின் மேலே ஊற்றி பரிமாறவும். ஃப்ரெய்டு மில்க் தேவையானவை: பால் - 1 லிட்டர், கன்டென்ஸ்டு மில்க், மைதா - தலா அரை கப், கஸ்டர்ட் பவுடர், சோளமாவு - தலா 4 ஸ்பூன், ஈஸ்ட், பேக்கிங் பவுடர் - தலா 1 ஸ்பூன், தேன் ...