Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/kalaireal360- Hey, look at this smart page! https://selvi-sk184.mojo.page/samayal-recipe-e-book
கிராமத்து சமையல் 1.உளுந்து-துவரம்பருப்பு வடை தேவையானவை: வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 கப், துவரம்பருப்பு 1 கப், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - அரை கப், தனியா -2 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, காய்ந்தமிளகாய் - 3, கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒன்றரை மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். இதனுடன் தனியா, பச்சைமிளகாய், காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து கரகரப்பாக அரைக்கவும். பின்னர் கொத்துமல்லித்தழை சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, கலந்து வைத்துள்ள மாவை மெல்லிய வடைகளாகத் தட்டிப் போட்டு, மொறுமொறுப்பாக வேகவைத்து எடுத்து, சூடாக பரிமாறவும். 2 .தக்காளி & பருப்பு ரசம் தக்காளி தேவையானவை: குழைய வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - 3, ரசப்பொடி - 2 டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, கட்டிப்பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, மஞ்சள்தூள், வெல்லம் - தலா சிறிதளவு, உப்பு தேவையான அளவு. 2. தாளிக்க: கடு...