ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
பாதாம் 200 கிராம். முந்திரிப் பருப்பு 200 கிராம். பாசிப் பருப்பு 50 கிராம். பொட்டுக்கடலை 50 கிராம். நெய் 150 கிராம். ஏலக்காய் 10 கிராம் பருப்பு வகைகள் அனைத்தையும் லேசாக வறுக்கவும். மிக்ஸி ஜாரில் நைஸாக பொடி செய்துக்கொள்ளவும். அதனுடன சீனி.500 கிராம். ஏலக்காய் 10 கிராம் நைஸாக பொடித்து கலந்து பிறகு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் 4.5 முந்திரிப்பருப்பை சின்ன சின்னதாக நறுக்கி. நெய்யில் வறுத்து இந்த மாவுடன் கலந்து விடவும். சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடித்து. லட்டுகளாக செய்யவும். பாதாம்.முந்திரி லட்டு ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக