பயத்தம்பருப்பு ஒரு டம்ளர் எடுத்து.பருப்பை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து.பிறகு மிக்ஸியில் உங்களுக்கு தேவையான அளவுக்கு பச்சைமிளகாய் சிறிது இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாவை மாற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசைக்கல் அடுப்பில் போட்டு தோசை ஊற்றி அதன் மேல் சிறிது நைசாக அறிந்து வெங்காயம் சேர்த்து. ஒரு பக்கம் மூடி எடுத்தால் பயறு தோசைரெடி. தேங்காய்சட்னி அல்லது தக்காளிசட்னியும்
சாப்பிடலாம்.
ஈசி சாம்பார் பத்து நிமிடத்தில் ரெடி
குக்கரை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 4 ஸ்பூன் விடுங்க. காய்ந்ததும் கடுகு. சீரகம். வெங்காயம் நறுக்கியது 2. எல்லாத்தையும் வதக்குங்க பிறகு மிக்ஸி ஜாரில் 4 .தக்காளி. கத்தரிக்காய் 1 லேசாக அடிங்க. பின் வதங்கிய வெங்காயத்துடன் கலந்து. மிளகாய் தூள் 2 ஸ்பூன். மல்லித் தூள் 1 ஸ்பூன். தேவையானளவு உப்பு. தண்ணீர் .தோசை மாவு 2 ஸ்பூன் (இல்லையென்றால்) கடலை மாவு 1 ஸ்பூன் அதில் கரைத்து விடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி விடுங்க. இந்த ஈசி சாம்பார் ரவா தோசை. கோதுமை தோசை. இட்லி. எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிடலாம். பத்தே நிமிடத்தில் ஈசி சாம்பார் ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக