பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
1 கப் பச்சைப் பட்டாணியை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக
நறுக்கி சேர்க்கவும் .தக்காளி 3 சிறிதாக அரிந்து சேர்க்கவும். அதில் ஒரு ஸ்பூன் மிளகு.1ஸ்பூன் மல்லித் தூள் .கரம் மசாலா அரை டீஸ்பூன். சீரகத்தூள் அரை டீஸ்பூன் சேர்த்து வதக்கவும் .அதனுடன் வேக வைத்த பட்டாணி. பன்னீர் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு கிளறவும். 10 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும். அதை 5 ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறவும். இரண்டு நிமிடம் மூடி வைத்து பின் ஒரு பாத்திரத்தில் மாற்றவும் பட்டாணி பனீர் மசாலா ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக