இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசி மாவு, வெள்ளை ரவை - தலா கால் கப், தயிர் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு இன்ச், பச்சைமிளகாய் - ஒன்று, உப்பு - தேவைக்கு. செய்முறை: ஓட்ஸை வெறும் வாணலியில் போட்டு வரும் வரை நன்றாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து மாவாக்கவும். அகலமான பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், அரிசி மாவு, வெள்ளை ரவை, சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி, கொத்துமல்லித்தழை, உப்பு, தயிர் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர்விட்டு 'ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும். இந்த மாவை சூடான தோசைக்கல்லில் ரவா தோசையைப் போல ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, தோசைக்கல்லை மூடி வேகவிடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு மொறுமொறுப்பாக வெந்ததும் எடுக்கவும்.