முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://kalaireal.blogspot.com

ரசகுல்லா

 ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.

இலந்தை வடாம் பச்சடி & தேங்காய்-வெல்லப் பால்

 இலந்தை வடாம் பச்சடி தேவையானவை: இலந்தை வடாம் - 10, வெல்லம் - சிறிய துண்டு, எண்ணெய், கடுகு - சிறிதளவு. செய்முறை: இலந்தை வடாமை தண்ணீரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும் இலந்தைப் பழத்திலும். இதே முறையில் பச்சடி செய்யலாம். பொங்கல் (அ) அரிசி உப்புமாவுடன் தொட்டுக்கொள்ள ஏற்ற சைட்-டிஷ்  தேங்காய்-வெல்லப் பால் தேங்காய் - 1, பொடித்த வெல்லம், பால் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன். செய்முறை: தேங்காயைத் துருவி பாலெடுக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி ஆறவைக்கவும். தேங்காய்ப்பாலுடன், ஏலக்காய்த்தூள், வெல்லக்கரைசல், காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த இனிப்புப் பாலை ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Good morning

 

Good morning

 

Good morning

 

Good morning