இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
ஈரல்-மிளகு வறுவல் தேவையானவை ஆட்டு ஈரல் கால் கிலோ, மஞ் சள்தாள், சீரகம் - தலா அரை டீஸ்பூன், தனியாத்தாள் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒன்றரை டீஸ்பூன். இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 7 பல். கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: ஈரலுடன் தனியாத்தூள், சிறிதளவு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு, சீரக விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் ஊற வைத்த ஈரலை சேர்த்து, அதனுடன் மீதமுள்ள மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். ஈரல் நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது, கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும். கடாய் சிக்கன் தேவையானவை: சிக்கன் - அரை கிலோ, வெங்காயம், தக்காளி - தலா 2. இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, நெய் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவ...