மலாய் கொஃப்தா மசாலா தேவையான பொருட்கள்: வெங்காயம் - 2, உருளைக்கிழங்கு - 2, கேரட் - 2, மஞ் தாள்-Vடீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம்மசாலா - % டீஸ்பூன், எண்ணெய் - 150 மிலி, உப்பு - தேவையான அளவு, சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன், பிரட்ஸ்லைஸ் - 4, லைம் ஜூஸ் ஒரு டீஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கு, கேரட் இரண்டையும் சுத்தம் செய்து வேசு வைத்து தனித்தனியாக மசித்து வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு கேரட்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து வதக்கி, பிரட் ஸ்லைஸை தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலவையில் சேர்க்கவும். அடுப்பை அணைத்து லைம் ஜூஸ் கலந்து, சோளமாவுடன் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி. எண்ணெயில் போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்க எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்- 3, தக்காளி - 2, மஞ்சள்தூள் டீஸ்பூன், மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன், பட்டை - 2, லவங்கம் - 2, உப்பு, கொத்துமல்லித்தழை - தேவையான அளவு. செய்முறை: பட்டை, லவங்கத்தை ...
அவகாடோ பாஸ்தா தேவையானவை: கோதுமை பாஸ்தா, நறுக்கிய பசலைக்கீரை தலா 1 கப், ஆலிவ் எண்ணெய், மிளகுத்தூள் - தலா 2 ஸ்பூன், பழுத்த அவகாடோ 2, நறுக்கிய கொத்துமல்லித்தழை - 1/2 கப், பூண்டு பற்கள் - 4, உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: பாஸ்தாவுடன் 2 கப் தண்ணீர், உப்பு, % ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து வேகவைக்கவும். பின்னர் நீரை வடித்து, குளிர்ந்த நீரில் அலசவும். அவகாடோவை நறுக்கி மிக்ஸியில் போடவும். இதனுடன் பசலைக்கீரை, கொத்துமல்லித்தழை, பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து விழுதாக்கவும். கடாயில் ஆலிவ் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து கிளறி, வெந்த பாஸ்தாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். லேயர் பாஸ்தா தேவையானவை: அளவில் சிறியதாக இருக்கும் பாஸ்தா - 2 கப், புதினா, தயி - 16 கப், வெள்ளை மிளகுத்தூள் - 1 ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, சர்க்கரை % ஸ்பூன், இஞ்சி - சிறு துண்டு, தக்காளி, காய்ந்த மிளகாய் தலா 2, ஆலிவ் எண்ணெய், சீஸ் துருவல் - தலா 2 ஸ்பூன், ஆரிகானோ - 1 1/2 ஸ்பூன், வெண்ணெய். உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: பாஸ்தாவை வேகவைத்து நீரை வடித்து, வெந்ததை மூன்று சம பாகங்களாக பிரிக்கவும். 1) புதினா, பச்சைமிளக...