ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
கேரட் - பீஸ் குருமா &கேரட் - ஆனியன் ஸ்பைசி சட்னி &கேரட் - பெப்பரி மக்ரோனி &கேப்ஸிகம் ரைஸ்,&கேரட் - மக்ரோனி பாயசம்
கேரட் - பீஸ் குருமா தேவையானவை: சிறிய சதுரங்களாக நறுக்கிய கேரட் - 1 கப், காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப் (ஊறவைத்து வேகவைக்கவும்), நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 2, பச்சைமிளகாய் - 1, தேங்காய்த்துருவல் - 1/4 கப், இஞ்சி-பூண்டு விழுது 3/4 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி - சிறிதளவு, சாம்பார்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சோம்பு - 1/4 டீஸ்பூன், முழு முந்திரி - 4, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் கேரட், நறுக்கிய தக்காளி மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த்துருவல், முந்திரி, மிளகாய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து, 1 கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் ஊற்றவும். நன்றாக சேர்ந்து வரும்போது, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடவும். கொத்துமல்லித்தழை, கசூரி மேத்தி தூ...