முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

GOOD MORNING

இனிப்புக் கவுனியரிசி&சீப்புச் சீடை&மனகோலம்&கும்மாயம்&வரமிளகாய்த் துவையல்

இனிப்புக் கவுனியரிசி தேவையானவை கவுனியரிசி - ஓர் ஆழாக்கு, சர்க்கரை, 12 ஆழாக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடிக்கவும்). செய்முறை: கவுனியரிசியைச் சுத்தம்செய்து, கழுவி, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஊறவைக்கவும். பின்னர், சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆவி அடங்கியதும் வெளியில் எடுத்து, நன்றாக மசித்து, சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நன்றாகக் கலந்து, பரிமாறவும். ம குறிப்பு: காலை உணவுடன், இந்த இனிப்பு வகையைப் பரிமாறலாம். சீப்புச் சீடை தேவையானவை: பச்சரிசி - 4 கப், பொட்டுக்கடலை - 1 கப், முழுத்தேங்காய் - 1, பு - 3 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைச் சிறிது நேரம் ஊறவைத்து, வடிகட்டி, மிக்ஸியில் மாவாக்கி, விக்கவும். இந்த மாவை வெறும் வாணலியில் போட்டு, மணலைப்போல உதிரியாக வரும்வரை வறுக்கவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சலிக்கவும். தேங்காயைத் துருவி, அரைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, பாலெடுத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். குடாகும்போது உப்பு சேர்த்து, இறக்கவும். திரிந்தது போலிருக்கும். இது, வெ...

சன்னா ஜிலேபி  & ஃப்ரெய்டு மில்க்  & டர்கிஷ் லோகம் 

 சன்னா ஜிலேபி  தேவையானவை: மைதா, துருவிய பனீர் - தலா 1 கப், உப்பு - சிட்டிகை, ஆப்ப சோடா - கால் ஸ்பூன், சர்க்கரை - 1 கப் + கால் கப், ஃபுட் கலர் (லெமன் நிறம்) - சிட்டிகை, பால் - 1 லிட்டர், பாதாம் - 10, நெய் - பொரிக்க தேவையான அளவு.  செய்முறை: மைதா, துருவிய பனீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர்  கலந்து கெட்டியாகப் பிசைந்து, ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக எடுத்து, நீள வடிவில் செய்து மடித்து, வட்டமாக வளையல் போல செய்து, சூடான நெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர், ஃபுட் கலர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 1 கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இந்தப் பாகில், பொரித்த ஜிலேபிகளை முக்கி எடுத்து, தட்டு அடுக்கவும். பாலை ஒரு கப் அளவு கண்டக் காய்ச்சி, ஊறவைத்து அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து கலந்து, ஜிலேபிகளின் மேலே ஊற்றி பரிமாறவும்.  ஃப்ரெய்டு மில்க்  தேவையானவை: பால் - 1 லிட்டர், கன்டென்ஸ்டு மில்க், மைதா - தலா அரை கப், கஸ்டர்ட் பவுடர், சோளமாவு - தலா 4 ஸ்பூன், ஈஸ்ட், பேக்கிங் பவுடர் - தலா 1 ஸ்பூன், தேன் ...

கேரட்- கேப்ஸிகம் சாம்பார்&குயிக் குழிப்பணியாரம்.&கேரட் ஃப்ரை&கேரட் - பீநட் ஸ்பைசி கறி&கேரட் - ஜிஞ்சர் ஜூஸ்

 கேரட்- கேப்ஸிகம் சாம்பார் தேவையானவை: கேரட் - 2 (வட்டமாக நறுக்கவும்), குடைமிளகாய் - 1 (சதுரமாக நறுக்கவும்). உரித்த சின்ன வெங்காயம் 15. कुबंडानी - 1, கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, வேகவைத்து மசித்த துவரம் பருப்பு -ஒன்றரை கப், சாம்பார்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், புளித்தண்ணீர், உப்பு - தேவைக்கு." செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வெங்காயம், நறுக்கிய தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, உப்பு, சாம்பார்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும், காய்கள் நன்றாக வெந்ததும், பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். சாம்பார் கலவை சேர்ந்து வரும்போது, நறுக்கிய கொத்துமல்லித் தூவி இறக்கவும்.' குயிக் குழிப்பணியாரம். தேவையானவை: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா 1/2 கப், இட்லி மாவு - 1 கப், பச்சைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா 1/4 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு...

கேரட் ஸ்பைசி ரைத்தா &புரோட்டீன் ரிச் சாலட்& கேரட்- கொத்துமல்லி சூப்&கேரட் - பீஸ் பால்ஸ்&கேரட் க்ரன்சி ஃப்ரை

 கேரட் ஸ்பைசி ரைத்தா தேவையானவை: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா 1/4 கப், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, குளிர வைக்கப்பட்ட கெட்டித் தயிர் 1 கப், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் டீஸ்பூன், காரா பூந்தி - சிறிதளவு, உப்பு - தேவைக்கு. செய்முறை: காரா பூந்தி தவிர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் காரா பூந்தி சேர்த்துக் கலந்து, உடனே பரிமாறவும்.  புரோட்டீன் ரிச் சாலட் தேவையானவை: கேரட் துருவல் 1/2 கப், அரைப்பதமாக வேகவைத்த பாசிப்பருப்பு 1/4 கப், நீளமாக நறுக்கிய சிறிய பச்சைமிளகாய் 3, எலுமிச்சைச்சாறு - ஒன்றரை டீஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து வைக்கவும். பின்னர் 30 நிமிட கழித்துப் பரிமாறவும். குறிப்பு: புரதச்சத்து அதிகளவில் நிறைந்துள்ள சாலட் இது! கேரட்- கொத்துமல்லி சூப் தேவையானவை: கேரட், தக்காளி தலா 4, 2, வெங்காயம் 1, பூண்டு பற்கள் கொத்துமல்லித்தழை - சிறிதளவு, பிரிஞ்சி இலை -...