முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

https://kalaireal.blogspot.com

ரசகுல்லா

 ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.

ஹெல்தி கா அச்சார் & கஸ்தா & தாலி பீத் 

 ஹெல்தி கா அச்சார்  தேவையானவை:  மஞ்சள் - 100 கிராம், கடுகு 1 ஸ்பூன், எலுமிச்சைச்சாறு 2 துண்டு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் ஸ்பூன், பச்சைமிளகாய் - 4, உப்பு - தேவைக்கு. செய்முறை: மஞ்சள், இஞ்சியை தோல் சீவி, மிகப் பொடியாக ஸ்பூன், இஞ்சி - சிறு நறுக்கவும். உப்பு, எலுமிச்சைச்சாறு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பின்னர் பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிச் சேர்க்கவும். கடுகு, வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்து சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சுத்தமான பாட்டிலில் அடைக்கவும். குறிப்பு: மஞ்சள் கிடைக்கும் சீசனில் வீட்டுக்கு வீடு இந்த ஊறுகாய் செய்து வைத்துக்கொள்வார்கள். ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வருடம் வரை கெடாமலிருக்கும்!  கஸ்தா  ஆலு தேவையானவை: சின்ன சைஸ் உருளைக்கிழங்கு - 20, தக்காளி - 2, மிகப்பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 ஸ்பூன், சீரகம், சோம்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா - தலா 1 ஸ்பூன், கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் வேகவைத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி, 'பட்டன்' போல செய்யவு...