முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

குடைமிளகாய் ஃபிரை &வாழைக்காய் ஃப்ரை & பாகற்காய் ஃபிரிட்டர்ஸ்

  குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.  வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...

பிரட் பீட்ஸா & ஃப்ரூட் சாண்ட்விச்

 பிரட் பீட்ஸா தேலையானவை. பிரட் துண்டுகள் - 8. ஆரிகானோ -துருவின பனீர், வெண்ணெய், தக்காளி சாஸ் - தலா 2 ஸ்பூன், துருவின சீஸ் - 2 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிகப்பொடியாக அரிந்த பச்சைமிளகாய் - 2. செய்முறை: துருவின பனீர், தக்காளி சாஸ், உப்பு, ஆரிகானோ, பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைக்கவும். பிரட்டில், வெண்ணெய் தடவவும், அதன்மேல், பனீர் கலவை தடவவும், துருவின சீஸ் சேர்க்கவும். அதன்மேல் மற்றொரு பிரட் வைத்து, அதன்மேல் ஒரு கனமான பாத்திரம் வைத்து, அடுப்பை சிம்மில் வைக்கவும், கீழ் பாகம் சிவந்ததும், பாத்திரத்தை எடுத்து, மறுபுறம் திருப்பி, வெந்ததும் பரிமாறவும். (பிரட்டின் மேல், அப்பளக்குழவியால் தேய்த்தால், பிரட் மெலிதாக ஆகும்.) ஃப்ரூட் சாண்ட்விச்ஃப்ரூட் சான்ட்விச்  தேவையானவை: சாண்ட்விச் பிரட் துண்டுகள் - 10, அளிந்த பழத்துண்டுகள் (மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, தர்பூசணி) - தலா 4 கப், வெண்ணெய் - 1 ஸ்பூன், செய்முறை: பழத்துண்டுகள் 10 எடுத்து வைத்து, மீதமானதை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். 2 பிரட் துண்டுகளையும் சேர்த்து அரைக்கவும். மீதமான பிரட் துண்டுகளில் வெண்ணெய் தடவவும். அரைத்து வைத்த ...

குருமா வகைகள்

 பாலக் உருளை குருமா தேவையானவை: நறுக்கிய பசலைக்கீரை -2 கப், நறுக்கிய உருளைக்கிழங்கு கப், உப்பு கால் தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் ஒன்று, சில்லி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன். அரைக்க: சோம்பு - அரை டீஸ்பூன், முந்திரித்துண்டுகள், பொட்டுக்கடலை தலா ஒரு டேபிள் ஸ்பூன், தக்காளி - தேங்காய்த்துருவல் - 6 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள். செய்முறை: உருளைக்கிழங்குடன் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தோலை உரித்து, நறுக்கவும். பசலைக்கீரையுடன் தண்ணீர், இறக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து, வெந்தகீரையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு, பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும் அப்போதுதான் கீரையின் நிறம் மாறாமல் இருக்கும்). அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு, கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை ஒன்று, வதக்கி, அரைத்த விழுது, சில்லி பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் வெந்த உருளையைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி விட்டு, அரைத்த கீரை விழுதைச் சேர்த்து மேலும் ...

புடலங்காய் குருமா&முருங்கைக்காய் குருமா&பீன்ஸ் குருமா

 புடலங்காய் குருமா தேவையானவை: நறுக்கிய புடலங்காய் ஒரு கப், பச்சைப்பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். அரைக்க: பச்சைமிளகாய் - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன், கசகசா ஒரு டீஸ்பூன். மேலே தூவி அலங்கரிக்க: நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன்   எண்ணெய் விட்டு, இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு, புடலங்காய் துண்டுகள், பச்சைப்பட்டாணி சேர்த்து வேகவிடவும். எல்லாமும் ஒன்றாக சேர்ந்து, நன்றாக வெந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கவும், குறிப்பு: தேங்காய் சேர்க்காமல் செய்வதால், இந்த குருமாவானது நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சப்பாத்திக்கு சரியான சைட் டிஷ்  முருங்கைக்காய் குருமா தேவையானவை: முருங்கைக்காய், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் தலா ஒன்று, உப்பு - த...

ஸ்வீட் குருமா &சைனீஸ்குருமா

 ஸ்வீட் குருமா   தேவையான பொருட்கள்  வெள்ளை(அ) மஞ் சள் பூசணி-ஒரு பத்தை, வெல்லம்-100 கிராம், வெங்காயம், தக்காளி, பட்டை லவங்கம் - தலா 2, மிளகாய்த்தூள், கசகசா, இஞ்சிபூண்டு, கரம்மசாலா - தலா ஒரு டீஸ்பூன், ம.தூள்-1/4 டீஸ்பூன், தே.பத்தை-6   செய்முறை பூசணியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பச்சையாகவும், வெங்காயத்தை வதக்கியும் தனித்தனியாக பேஸ்ட் செய்து கொள்ள வும். வாணலியில் சோம்பு, பட்டை, லவங்கம் தாளித்து பூசணியை வதக்கவும். பிறகு தக்காளி பேஸ்ட் சேர்த்து ம.தூள், மிளகாய்த் தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய் பத்தை, கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வதக்கிய பூசணியுடன் தக்காளி பேஸ்ட், இஞ்சிபூண்டு பேஸ்ட், வெங்காய பேஸ்ட், ம.தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன் தேங்காய் பேஸ்ட் ஊற்றிக் கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மஞ்சள் பூசணி என்பது பரங்கிக்காய்!   சைனீஸ்குருமா செய்முறை தேவையான பொருட்கள் கேரட்- 2, குடை மிளகாய் - ஒன்று வெங்காயத்தாள் சிறிதளவு வெங்காயபேஸ்ட், தக்காளிபேஸ்ட்-தலா 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்...

காலிஃப்ளவர்குருமா&ஆலுமட்டர் குருமா&உருண்டை குருமா

 காலிஃப்ளவர்குருமா தேவையான பொருட்கள் காலிஃப்ளவர்- ஒன்று. சோம்பு. கடுகு சீரகம்-தலா % டீஸ்பூன், வெங்காயம்- 2, தக்காளி-3, சுரம் மசாலா இஞ்சிபூண்டு பேஸ்ட் - தலா ஒரு டீஸ்பூன், ம.பொடி, மிளகாய்ப்பொடி- தலா / டீஸ்பூன், தேங்காய் - 6பத்தை, பொட்டுக்கடலை-ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை கடுகு, சீரகம், சோம்பு தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கி அரைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரில் மஞ்சள்தூள், உப்பு போட்டு வேக வைத்து தாளித்த கடுகுடன் சேர்த்து வதக்கவும். பின் சிறிது தண்ணீர் விட்டு உப்பு, கரம்மசாலா, மிளகாய்ப் பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சைத் தக்காளியை தனியே அரைத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை, தேங்காய், ப.மிளகாயை பேஸ்ட் செய்யவும். காலிஃப்ளவர் கொதி வந்தவுடன். தக்காளி பேஸ்டைச் சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்க் கலவையைக் கொட்டி கொதிவந்தவுடன் இறக்கவும். சாஃப்ட் இட்லிக்கு நல்ல சுவையான குருமா! ஆலுமட்டர் குருமா தேவையான பொருட்கள் சிறிய உருளை-% கிலோ. பபட்டாம் 50 கிராம் தேங்காய்-6 பத்தை முந்திரி 50 கிராம் தக்காளி, 4. வெங்காயம் 2. கரம்மசாலா, மாங்காய்ப்பொடி இஞ்சிபூண்டு பேஸ்ட்- தலா ஒரு டீஸ்பூன்,...

புதினா பிஸ்கெட்&மல்லி பப்பு&கறிவேப்பிலை-காலிஃபிளவர் ரோஸ்ட்

 புதினா பிஸ்கெட் தேவையானவை: புதினா இலைகள் - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், சீரகம், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புதினா இலைகளை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து சீரகம் சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த புதினா பொடி, வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல வட்டமாக இட்டு, விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்  மல்லி பப்பு துவரம் பருப்பு - ஒரு கப். கொத்துமல்லித்தழை - அரை கப், தக்காளி - 3, சீரகம் ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பெருங்காயம் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு. துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக விடவும். கொத்துமல்லித்தழையுடன் சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர...