ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
சீரக சம்பா அரிசி - 1 கப்பு கல்கண்டு - 2 கப், பால் - 3 கப், முந்திரி - 10, குங்குமப்பு - சிறிதளவு நெய் - 5 கப், செய்முறைசீரக சம்பா அரிசியை, 3 கப் பால் சேர்த்து, குழைய வேகவைத்து, மசிக்கவும்..
கல்கண்டுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கெட்டி பாகு கொதிக்கும்போது, மசித்த சாதம் சேர்த்து கலக்கவும். குங்குமப்பூ சேர்க்கவும். ஸ்பூன் நெய்யில் முந்திரி சேர்த்து, வறுத்து சேர்க்கவும். மீதமுள்ள நெய் சேர்த்து, நன்கு கலந்து, அடுப்பை அணைக்கவும்.
உளுந்தங்களி
தேவையானவை: முழு கறுப்பு உளுந்து, பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, பொடித்த கருப்பட்டி 250 கிராம், வெந்தயம் கால் டீஸ்பூன்,
செய்முறை: வெறும் வாணலியில் முழு உளுந்து, வெந்தயம் இரண்டையும் போட்டு வறுத்து ஆறவைக்கவும், இதனுடன் பச்சரிசியை சேர்த்து மானக திரித்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம் ஒன்றில் கருப்பட்டியைப் போட்டு பாகு காய்ச்சவும். அதில் திரித்து வைத்துள்ள மாவை கொஞ்சம், கொஞ்சமாகத் தூவிக் கிளறவும். பின்னர் வேகவிடவும், சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே இறக்கி சூடாகப் பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக