'புதினா பிஸ்கெட்
தேவையானவை:
புதினா இலைகள் - அரை கப், கோதுமை மாவு - ஒரு கப், சீரகம், வெண்ணெய் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலைகளை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைத்து சீரகம் சேர்த்து அரைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த புதினா பொடி, வெண்ணெய் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும். பின்னர் இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல வட்டமாக இட்டு. விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேரத்தில் தேனீருடன் சாப்பிட ஏற்ற ஸ்நாக் இது!
புதினா-ஆலு ஃபிரை
தேவையானவை:
புதினா இலைகள் - ஒரு கப், உருளைக்கிழங்கு - கால் திலோ, சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மஞ் அன்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான
புதினாவை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து. கைகளால் நொறுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நொறுக்கி வைத்துள்ள புதினா இலைகளை சேர்த்து கிளறி பாத்திரத்தை மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஃபிரை செய்து இறக்கவும். இந்த ஃபிரையை சப்பாத்தியுடன் தொட்டுக் கொள்ளலாம்!
மல்லி-மசாலா பூரி
தேவையானவை
கோதுமை மாவு - ஒரு கப், கொத்துமல்லித்தழை - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
கொத்துமல்லித்தழையை சுத்தம் செய்து மிக்ஸியில் போடவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்து வடிகட்டிய மல்லித்தண்ணீர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக திரட்டி, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக