மரவள்ளி கட்லட்
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் ஒன்று, உருளைக்கிழங்கு - 2, பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன், சோள மாவு ஒரு டேபிள் ஸ்பூன் பட்டாணி - 50 கிராம், எலுமிச்சைச்சாறு, சாட் மசாலா, கொத்துமல்லித்தழை, புதினா, மஞ் சள்தூள் - சிறிதளவு, ரொட்டித்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கு, பட்டாணி, உருளையை தனித்தனியாக வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, ப.மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள்தூள், மசித்த மரவள்ளி, உருளை, பட்டாணியைச் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச்சாறு, சாட் மசாலா, கொத்துமல்லித்தழை, புதினா, கெட்டியான சோள மாவுக் கரைசல், உப்பு சேர்த்து பிசைந்து, வடை போல தட்டவும். பின்னர் அதை ரொட்டித்தூளில் புரட்டி, காய்ந்த தவாவில் போட்டு, எண்ணெய் ஊற்றி, இருபறமும் திருப்பிப் போட்டு, சுட்டு எடுக்கவும்.
அவல் கட்லட்
தேவைாளை ஒரு கப் உருளைக்கிழங்கு - 2. பட்சணி - 50 கிராம், பச்சைமிளகாய் விழுது ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சவிச்சைச்சா தலைஒருஸ்ன் சீரகத்தூள் அரைடு உளுந்து, கறிவேப்பிலை சிறிதளவு கொத்துமல்லித்தழை, உப்பு, எண்ணெய் தேவை
செய்முறை: அவலை ஊறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, மசித்த உருளை, வேகவைத்து மசித்த பட்டாணி சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு உளுந்தை தாளித்து இஞ்சிபூண்டு விழுது, பயிளகாய் விழுது. கறிவேப்பிலை, சீரகத்தூன், உப்பிடி அரைத்த அவல், மசித்த உருளை, பட்டாணி, எலுமிச்சைச்சாடி 'கொத்துமல்லிதழை சேர்த்து கிளறி இறக்கவும் பின்னர் துை வடை போல தட்டி காய்ந்த தவளவில் போட்டு, எண்ணெய்விட் இருபுறமும் திருப்பிப் போட்டு, சுட்டு எடுக்கவும்,
மல்டி வெஜ் கட்லட்
தேவையானவை: கேரட், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், மாங்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், (நறுக்கியக் கலவை) - ஒரு கப், பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன், உருளைக்கிழங்கு 2 வெங்காயம் - ஒன்று, அரிசி மாவு - ஒரு டம்ளர், கடலை மாவு - அரை டம்ளர், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, வெந்து மசித்த உருளை
சிறிதளவு, ரஸ்க் தூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து, மசித்த உருளை, அரிசி மாவு, கடலை மாவு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை, உப்பு சேர்த்து பிசைந்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான தவாவில் எண்ணெய் ஊற்றி, கட்டு எடுக்கவும்.
கேரட் கட்லட்
தேவையானவை: அரிசி மாவு - ஒரு டம்னர், பொட்டுக்கடலை மாவு - அரை டம்ளர், உருளைக்கிழங்கு - 2, வெங்காயம் - ஒன்று, பச்சைமிளகாய் விழுது - ஒரு ஸ்பூன், கேரட் துருவல் - அரை கப், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், மிளகாய் விழுது, மசித்த உருளை, உப்பு, வெந்நீர் சேர்த்துப் பிசைந்து, வடை போல தட்டவும். பின்னர் அதை சூடான தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு, கட்டு எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக