குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...
பனீர் வெஜ் சாலட் பனீர் வெஜ் சாலட் தேவையானவை: துருவிய பனீர், கேரட், பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 1/4 கப், பச்சை மிளகாய் -2 (இரண்டாக கீறிக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - 1.5 டீஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் அகலமான பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்து பரிமாறவும் . பனீர் மசாலா பப்பட் தேவையானவை: மிளகு அப்பளம் - 2, துருவிய பனீர், துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் குடைமிளகாய் - தலா 1 கப் மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன், மாங்காய்த்தூள், சாட் மசாலாத்தூள் தலா 1/4 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு. செய்முறை: அடுப்பில் தோசைக்கல்லை நன்றாக சூடுபடுத்தி, மிளகு அப்பளத்தை போட்டு, இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு சுட்டு எடுக்கவும். மற்ற பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, சுட்ட மிளகு அப்பளம் மீது பரப்பி வைத்து, ஏதாவதொரு சூப்புடன் பரிமாறவும். பனீர் ஸ்டிக்ஸ் தேவையானவை: நீளமாக மெலிதாக நறுக்கிய பனீர் - 100 கிராம், மைதா 1/2 டேபிள் ஸ்பூ...