ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
ஜ்வார்ச்சி பாக்ரி
தேவையானவை: சோளமாவு - 2 கப், ஓமம் - அரை ஸ்பூன்,
நெய் - 4 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிர் - எண்ணெய் - தேவைக்கு. 1 கப், உப்பு,
செய்முறை: சோளமாவுடன் ஓமம், நெய், உப்பு, தயிர் சேர்த்துப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் அந்த மாவை அப்பளக்குழவியால் சற்றே கெட்டியான அப்பளமாக திரட்டவும்.
ஒரு பக்கம் தண்ணீர் தடவி, சூடான தவாவில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் - மறுபக்கம் திருப்பிப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, சுட்டு எடுக்கவும்.
குறிப்பு: மகாராஷ்டிர மக்கள் குளிர்க்காலங்களில் இந்தப் பாக்ரியை செய்து, மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ரவாய்ச்சே லாடு
தேவையானவை: ரவை 1 கப், சர்க்கரை - முக்கால் கப்,
தேங்காய்த்துருவல் - கால் கப், பாதாம் - 10, நெய், சர்க்கரை சேர்க்காத கோவா கால் கப், குங்குமப்பூ ஏலக்காய்த்தூள் - கால் ஸ்பூன். 2 சிட்டிகை, -
செய்முறை: வாணலியில் 4 ஸ்பூன் நெய்யுடன் ரவையை சேர்த்து
நிறம் மாறாமல், வாசனை வரும் வரை வறுக்கவும். தேங்காய்த்துருவல், பாதாமை மிக்ஸியில் அரைத்து, கோவா, குங்குமப்பூ சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக்கவும். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து சிறு கொதிக்கவிடவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த ரவை சேர்த்து கிளறவும். இளகி வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி, இளம் சூட்டுடன் இருக்கும்போது, உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டையினுள்ளே பாதாமை வைத்து மூடி, மறுபடியும் உருண்டைகளாக்கி தட்டில்' அடுக்கவும்.
குறிப்பு: 'விநாயகர் சதுர்த்தி'க்கு இந்த லாடு விசேஷமாக செய்யப்படுகிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக