குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...
இலை அடை தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...
கருத்துகள்
கருத்துரையிடுக