பச்சி புலுசு
தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை - ஒரு டீஸ்பூன், வெல்லம் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப்.
தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, புளித்தண்ணி
தயார் செய்யவும். அந்த புளித்தண்ணீரில் வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி, நசுக்கி, புளித்தண்ணி சேர்த்துக் கலக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழையை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை தாளித்துக் கொட்டவும் அரை மணிநேர இட்லி பருப்பு சாதம், வெண் பொங்கல் என இவற்றில் புதாவது ஒரு உணவுடன் பச்சி புலுகவை பரிமாறலாம்.
பீரக்காய தொக்கு பச்சடி
தேவையானவை:
பீர்க்கங்காய் - ஒன்று, சீரகம்
அரை டீஸ்பூன், பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 3, தக்காளி - ஒன்று, வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உளுந்து - ஒரு டீஸ்பூன்,
வரமிளகாய் - ஒன்று, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து.
செய்முறை: பீர்க்கங்காயின் தோலை சீவவும். சற்றே தடிமனான தோலை நீக்கி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பீர்க்கங்காயின் தோலை சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஆறவைத்த பீர்க்கைத்தோல் கலவை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும், காய்ந்த எண்ணெயில் கடுகை தாளித்து, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமானதும், பச்சடியில் கொட்டி, சூடாகப் பரிமாறவும்
பாபு அன்னம்
தேவையானவை: வேகவைத்த சாதம் - 2 கப், கடுகு, சீரகம் - தலா அரை
டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை தலா 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, வரமிளகாய், பச்சைமிளகாய் - தலா 2, எண்ணெய் - தேவைக்கு, வெங்காயம் ஒன்று, பூண்டு - 2 பல், உப்பு - தேவைக்கு, கொத்துமல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், கீறிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து, பருப்புகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து. வெங்காயம் பொன்னிறமானதும், சாதத்தைச் சேர்த்துக் கிளறி, நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
ஆந்திரா பெசரட்டு
தேவையானவை: பச்சைப்பயறு -ஒரு கப், பச்சரிசி - அரை கப், இஞ்சி -
ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் 6,உப்பு - தேவைக்கு, பெரிய வெங்காயம் - 2, கொத்துமல்லித்தழை - 2 டீஸ்பூன்.
செய்முறை : பெரிய வெங்காயத்தையும் கொத்துமல்லித்தழையையும்
பொடியாக நறுக்கி, ஒன்றாகக் கலந்து, தனியாக வைக்கவும். பச்சரிசியையும் பச்சைப்பயறையும் மூன்று மணி நேரம் தனித்தனியாக ஊறவைத்து, அவற்றுடன் இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு அரைக்கவும். இந்த மாவில் தோசை வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லித்தழை கலவையைத் தூவி, மடித்து எடுத்து, சூடாகப் பரிமாறவும், இந்த பெசரட்டுடன் தொட்டுக்கொள்ள 'அல்லம் பச்சடி ஏற்றது.
புலகம்
தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பாசிப்பருப்பு - அரை கப், தண்ணீர் -3 கப், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரி - 12, நெய் - ஒன்றரை டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் வெறும் வாணலியில்
தனித்தனியாகப் போட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் கழுவி, 3 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, ஊறவைத்த அரிசி - பருப்புக் கலவையில் கொட்டி, குக்கரை அடுப்பில் வைத்து, மூன்று விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, முந்திரியை பொன்னிறமாக வறுத்து, வேகவைத்த புலகத்தில் கொட்டிக் கிளறவும், மாங்காய் ஊறுகாய் அல்லது தக்காளித் தொக்குடன் சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: காலை நேர பரபரப்பிலும் இந்த கிச்சடியை குறைந்த நேரத்திலேயே சுலபமாகச் செய்து முடித்து விடலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக