உக்கனி
தேவையானவை: பொரி - 5 கப், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெரிய வெங்காயம் - 2, வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கொத்துமல்லித்தழை - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவைக்கு, பொட்டுக்கடலை -ஒரு கைப்பிடி
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு -ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொரியைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, மூன்று நிமிடம் ஊறவைத்துப் பிழிந்து, தனியாக வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து, பருப்புகள் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்றே பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வறுத்த வேர்க்கடலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் ஊறவைத்துப் பிழிந்து வைத்துள்ளப் பொரியைச் சேர்த்து, மூன்று நிமிடம் வதக்கி, பொட்டுக்கடலைப் பொடி மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, சூடாக பரிமாறவும்.
குறிப்பு: இந்த 'பொரி உப்புமாவை ஒரு தக்காளியை நறுக்கிச் சேர்த்தும் செய்யலாம். ஒரு கேரட்டை துருவியும் சேர்க்கலாம்.
கர்ஜிகாய
தேவையானவை: மைதா மாவு
ஒரு கப், ரவை வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. 2 டீஸ்பூன், உருக்கிய
பூரணம் செய்ய: பொட்டுக்கடலை, சர்க்கரை - தலா அரை கப், முந்திரி, பாதாம், பூசணி விதை - தலா 12.
செய்முறை: பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸியில்
போட்டு பவுடராக்கவும். பின்னர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பூசணி விதையைக் கலந்தால் 'பூரணம்' ரெடி! அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, உருக்கிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, மாவை கெட்டியாகப் பிசையவும். அரை மணி நேரம் கழித்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, வட்டமாகத் தேய்த்து, அதை அப்படியே கொழுக்கட்டை அச்சில் வைக்கவும். பின்னர் சிறிதளவு பூரணத்தை வைத்து மூடவும். ஓரங்களில் தண்ணீரை தொட்டு வைத்து, நன்றாக மூடவும். வாணலியில் எண்ணெயை காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரெடி செய்து வைத்துள்ளவற்றை போட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
பூர்னாலு
தேவையானவை: அரிசி, கடலைப்பருப்பு, வெல்லம் தலா ஒரு கப், உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு, தேங்காய்த்துருவல் - கால் கப்.
செய்முறை: அரிசியையும் உளுந்தம் பருப்பையும் தனித்தனியாக நான்கு முதல்
ஐந்து மணி நேரமோ அல்லது முதல் நாள் இரவோ ஊறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் மையாக அரைத்து, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஒரு விசில் வரும் வரை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து, வெல்லம் சேர்த்து மையாக அரைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கலந்தால் 'பூரணம்' தயார். இந்தப் பூரணத்தை எலுமிச்சை அளவில் எடுத்து, அரைத்துவைத்துள்ள மாவில் தோய்த்து எடுத்து, நன்றாகக் காய்ந்த எண்ணெயில் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொன்னிறமானதும் எடுக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்புக்குப் பதிலாக துவரம் பருப்பும் சேர்க்கலாம்.
பொப்பட்லு.
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, கடலைப்பருப்பு / துவரம் பருப்பு - முக்கால் கப், வெல்லம் - முக்கால் கப், தேங்காய் - கால் கப்.
செய்முறை: மைதா மாவுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர்
விட்டு கலந்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்தை விட மாவை சற்றே மிருதுவாகப் பிசையவும். பின்னர் 3 மணி நேரம் ஊறவைத்து, மாவை மறுபடியும் பிசைந்தால் மேல் மாவு ரெடி! வெறும் வாணலியில் கடலைப்பருப்பை போட்டு, வாசனை வரும் வரை 5 நிமிடம் வதக்கி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்த பருப்புடன் தேங்காய், பொடித்த வெல்லம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் 'பூரணம்' ரெடி. பிசைந்து வைத்துள்ள மாவை எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, வாழை இலையில் வைத்து, வட்டமாகத் தட்டி, நடுவில் சிறிய பூரண உருண்டையை வைத்து மூடி, மறுபடியும் அதை வட்டமாகத் தட்டவும். பின்னர் அதை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் நெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாகும் வரை திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக