வடை பஜ்ஜி ரெசிபீஸ்! துறையூர் நேத்து வடை&டீக்கடை காரவடை&கொத்திம்பிர் வடை&நூடுல்ஸ் வடை&பொங்கலம்வடை&ஃபலா ஃபல் வடை&திடீர் வடை&செட்டிநாடு கல்கண்டு வடை&திருநெல்வேலி தேங்காய் வடை&
துறையூர் நேத்து வடை&
தேவையானவை: பச்சரிசி, கெட்டியான பால், பொடித்த வெல்லம் - 2 கப், பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப், உப்பு - சிட்டிகை, எண்ணெய் - பொரிப்பதற்கு.
செய்முறை: பச்சரிசியை நன்றாகக் கழுவிவைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 கப்
தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைக்கவும். தண்ணீர் நன்றாக சூடானதும், கழுவிய அரிசியைச் சேர்த்து, உடனே அடுப்பை அணைத்து, நீரை முழுவதுமாக வடிக்கவும். பின்னர், கெட்டியான பால் சேர்த்து, 2 மணிநேரம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு, வழுவழுப்பாக அரைக்கவும். அடுத்ததாக, பொடித்த வெல்லம் சேர்த்து கலக்கவும் (மாவு இளகியிருந்தால், சிறிதளவு அரிசிமாவு சேர்க்கலாம்). பொடியாக நறுக்கிய தேங்காய்ச் சேர்த்து, நன்றாகக் கலந்து, வடையாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில்வைத்து, பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: இதைக் கடவுளுக்குப் படைப்பதால், 'நேர்த்தி வடை' என்றும் சொல்கிறார்கள். முதல்நாள் செய்து, மறுநாள் சாப்பிடுவதால், 'நேத்து வடை' என்றும் சொல்கிறார்கள்
டீக்கடை காரவடை
தேவையானவை: பட்டாணிப்பருப்பு - 2 கப், பச்சரிசி - 1/4 கப், பச்சைமிளகாய், பூண்டுப்பற்கள், மிளகாய்வற்றல் - தலா 4, கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், புதினா கைப்பிடியளவு, பெரிய வெங்காயம் - 2, சோம்பு 1 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: உரித்த பூண்டு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். பட்டாணிப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். இந்த ஊறிய பருப்பிலிருந்து 1 கரண்டி எடுத்து, தனியாக வைக்கவும். மீதமுள்ள பருப்புடன், பச்சரிசி, அரைத்த பூண்டுக்கலவைச் சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்னர், சோம்பு, நறுக்கிய வெங்காயம், எடுத்துவைத்த பருப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சூடான எண்ணெய்யில், தட்டிப்போட்டு, எடுக்கவும்.
குறிப்பு: பட்டாணிப்பருப்பில் வடை செய்தால், மிகவும் கரகரப்பாக இருக்கும். பெரும்பாலான டீக்கடைகளில் விற்கப்படும் வடையின் ரகசியம் இதுதான்!
கொத்திம்பிர் வடி
தேவையானவை: சுத்தம்செய்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி 8 கப், கடலைமாவு - 1 கப், அரிசிமாவு - 1/2 கப், பச்சைமிளகாய் - 5, பூண்டு - 8 பற்கள், தனியா, வெள்ளை எள் - தலா 2 ஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன், எண்ணெய் - 4 ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: பச்சைமிளகாய், பூண்டு, தனியா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும். ஒரு தட்டில் கொத்தமல்லி, கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மஞ்சள்தூள், எள், அரைத்த பச்சைமிளகாய் விழுது, சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், அதனை உருட்டி, நீளமாக செய்து, கத்தியால் சிறுசிறு வில்லைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
குறிப்பு: நறுக்கிய வில்லைகளை 'ஜிப்லாக்' கவரில் போட்டு, ஃப்ரீஸரில் வைத்தால், 6 மாதங்கள் வரை உபயோகிக்கலாம். கொத்தமல்லி நிறைய கிடைக்கும் காலங்களில், மகாராஷ்டிராவில் செய்துவைப்பார்கள். காய்கறி இல்லாதபோது, வடை செய்வார்கள்
நூடுல்ஸ் வடை
தேவையானவை: நூடுல்ஸ் - 1 பாக்கெட், உருளைக்கிழங்கு - 4, முந்திரி - 10, இஞ்சித்துருவல், மிளகாய்த்தூள் - தலா 2 ஸ்பூன், மஞ்சள்தூள் எலுமிச்சைச்சாறு - 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு. 1/4 ஸ்பூன்,
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். இதனுடன்
உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, நறுக்கிய முந்திரி, எலுமிச்சைச்சாறு சேர்த்து, நன்றாகக் கலந்து, சம அளவு உருண்டைகளாக்கவும். நூடுல்ஸுடன் தண்ணீர், உப்பு, நூடுல்ஸ் மசாலா சேர்த்து வேகவைத்து, தண்ணீரை முழுவதுமாக வடித்து, கைகளால் பிசைந்து, சம அளவு உருண்டைகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். உருளைக்கிழங்கு உருண்டைக்குள், நூடுல்ஸ் உருண்டையை வைத்து, மூடி, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, தட்டையாக்கவும்.
பின்னர், சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, புதினா சட்னியுடன் பரிமாறவும். குறிப்பு: குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டியின்போது செய்து, பரிமாற ஏற்றது!
பொங்கலம் வடை
தேவையானவை: பச்சரிசி - 1 கப், கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு (மூன்றும் சேர்த்து) - 1 கப், மிளகு - 1 ஸ்பூன், மிளகாய்வற்றல் - 4, பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப், பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக ஊறவைத்து, வடிக்கவும். இதனுடன்
மிளகு, மிளகாய்வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, ரவைப் பதத்தில் கரகரப்பாக அரைக்கவும். பின்னர், உப்பு, தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்துகொள்ளவும். கடாயில் 1 கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அரைத்த மாவை நடுவில் கெட்டியாக ஊற்றவும். அடுப்பை நிதானமாக எரியவிட்டு, இருபுறமும் திருப்பிவிட்டு, மொறுமொறுப்பானதும், எடுக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவில் செய்து, தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: தஞ்சையின் பாரம்பரியமிக்க இந்த வடை, மிகவும் கரகரப்பாக இருக்கும்.
ஃபலா ஃபல்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப், பூண்டு - 4 பற்கள், -ஆரிகானோ 1 ஸ்பூன், பேசில் இலைகள் (விபூதி இலை) - 10, பச்சைமிளகாய் - 4, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை ஊறவைத்து, நீரை வடித்து, பூண்டு, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து, கெட்டியாக அரைக்கவும். இதனுடன், நறுக்கிய பேசில் இலைகள், ஆரிகானோ சேர்த்து, நன்றாகக் கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: வெளிநாடுகளில் இது, 'ஸ்டார்ட்டர்' ஆகப் பரிமாறப்படுகிறது.
கேரளா பச்சைமிளகு வடை
தேவையானவை: உளுந்தம்பருப்பு - 1 கப், பச்சைமிளகு, பச்சரிசி, பொட்டுக்கடலை, வெண்ணெய் - தலா 2 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: உளுந்தை வெறும் கடாயில் போட்டு, சூடுவர வறுக்கவும் (சிவக்கக்கூடாது). அதேபோல் பச்சரிசியையும் வறுக்கவும். இரண்டையும் ஒன்றாகப் போட்டு, பொட்டுக்கடலை சேர்த்து, சன்ன ரவையாக அரைத்தெடுக்கவும். பச்சைமிளகை கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் அரைத்த உளுந்துக்கலவை, உப்பு, வெண்ணெய்ச் சேர்த்து நன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர், சூடான எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப் போட்டு எடுக்கவும். மொறுமொறுப்பான இந்த வடையை 10 நாள்கள்கூட வைத்திருந்து சாப்பிடலாம்.
திடீர் வடை
தேவையானவை: சாதம் 1 கப், அரிசிமாவு, ரவை, தயிர் - தலா 1/4 கப், சமையல்சோடா - 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்குகள், பச்சைமிளகாய் - 3, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: சாதத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் அரிசிமாவு, தயிர், ரவை, உப்பு, சமையல் சோடா, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதை, சூடான எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப் போட்டு, பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: இந்த வடையை 10 நிமிடங்களில் செய்துவிடலாம். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு, டொமேட்டோ சாஸுடன் சூடாகப் பரிமாறலாம்.
செட்டிநாடு கல்கண்டு வடை
நவையானவை: உளுந்தம்பருப்பு -
1 கப், அரிசி - 1/4 கப், பொடித்த ண்டு - 3/4 கப், உப்பு - சிட்டிகை, மிகப்பொடியாக நறுக்கிய முந்திரி - 1/4 கப், ணய் / நெய் - பொரிக்கத் தேவையான அளவு,
சய்முறை: உளுந்து, அரிசியைத் தனித்தனியாக 2 மணிநேரம் ஊறவைத்து, நீரை
முழுவதுமாக வடிக்கவும், அரிசியை மிக்ஸியில் போட்டு, மாவாக்கி, எடுத்துவைக்கவும். உளுந்தை மிக்ஸியில் கொஞ்சமாகப் போடவும் (தண்ணீர் ஊற்றக்கூடாது). அதன்மேல் கல்கண்டு, அதன்மேல் உளுந்து என்று மாற்றி மாற்றிப் போட்டு, மைய அரைத்தெடுக்கவும். இதனுடன், அரைத்த அரிசிமாவு, நறுக்கிய முந்திரி சேர்த்து, கைகளால் நன்றாகக் கலந்து, சூடான எண்ணெய்யில் தட்டிப்போட்டு, அடுப்பை மிதமான
தீயில் வைத்து, பொரித்தெடுக்கவும்.
திருநெல்வேலி தேங்காய் வடை
தேவையானவை: பச்சரிசி
2 கப், தேங்காய்த்துருவல் - 4 கப், அரிசிமாவு - 1/4 கப், பச்சைமிளகாய் - 2, சீரகம் - 1/2 ஸ்பூன், மிளகுத்தூள் - 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.'
செய்முறை: பச்சரிசியைக் கழுவி, 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
இத்துடன்,
தேங்காய்த்துருவல், உப்பு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து, அதிகம் தண்ணீர் ஊற்றாமல், கெட்டியாக அரைக்கவும். இதனுடன் அரிசிமாவு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து, சூடான எண்ணெயில் தட்டிப் போட்டு, சுட்டெடுக்கவும்.
குறிப்பு: எண்ணெயில் போட்டதும், பூரிபோல ப்பிவரும். மிகவும் மிருதுவாக, வாசனையாக, த்தியாசமான சுவையுடன் இருக்கும், இந்த வடை.
கருத்துகள்
கருத்துரையிடுக