தேவையானவை: நூடுல்ஸ் - ஒரு கப், பன்னீர் 100 கிராம், வெங்காய விழுது, தக்காளி விழுது - தலா கால் கப், தயிர் 4 டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, மஞ்சள்தூள், சீரகத்தூள் தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் தலா அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது, தனியாத்தூள் தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கவும். பின் அதை குளிர்ந்த நீரில் அலசி நீரை வடிய விடவும். அகலமான கடாய் ஒன்றில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய பச்சைமிளகாயை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காய விழுது, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி விழுதுஅல்லது தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் பன்னீர் (க்யூப் )சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும். கலவையில் நீர் வற்றி கெட்டியாக வந்ததும் நூடுல்ஸைச் சேர்த்து கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.
காலிஃப்ளவர் பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...
கருத்துகள்
கருத்துரையிடுக