முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

காலிஃப்ளவர் மசாலா

  காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

விநாயகர் சதுர்ததி மோதகம்....& காரக் கொழுக்கட்டை

  

விநாயகர் சதுர்ததி மோதகம்....

& காரக் கொழுக்கட்டை

4 ஸ்பூன் கடலை பருப்பு. குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு .அரை பதத்துக்கு வேக விடுங்க. வெயிட் போடாமல் ஒரு அஞ்சு நிமிஷம் வெச்சாலே போதும் வெந்த பருப்பை ஆறியதும் மிக்சியில் நைசாக அடிச்சுருங்க. தேங்காய் 2 கப். வெல்லம் 2 கப். எல்லாம் சுத்தம் பண்ணி எடுத்து வச்சுக்குங்க. அடுப்பில் அடி கனமாக உள்ள கடாய்  வையுங்க. வெச்சிட்டு வெள்ளம் கொஞ்சம் தண்ணி விட்டு கரைந்ததும். தேங்காய்  சேருங்க .கொஞ்சம் நல்ல திக்கானதும் அடுப்பை நிறுத்திட்டு இந்த கடலை பருப்பு சேர்த்து நல்லா கிண்டுங்க‌ அதுக்கப்புறமா அடுப்பு பத்த வைச்சு.நல்லா திரண்டு வரும் போது.அதில்10கிராம் ஏலக்காய்த் தூள்.2 ஸ்பூன் நெய் விடுங்க.சுருண்டு சீக்கிரமேபூரணம் ரெடியாயிடும் பூரணம்.ரெடியானதும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வச்சிருங்க.பிறகு நம்ம மாவு ரெடி பண்ணனும் ஒரு பாத்திரத்தில் ஒன்னேகால் டாம்ளருக்கு தண்ணீர் ஊற்றி நல்லா கொதி வரும்போது. அரை உப்பு போடுங்க.1 ஸ்பூன் நல்லெண்ணைய் விடுங்க.அடுப்பைஆஃப் பண்ணிட்டு‌‌.ஒரு டம்ளர் பச்சரிசி மாவை அதில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து.கட்டி இல்லாமல் நன்கு கிளறிவிட்டு.அடுப்பில் வைத்து கொஞ்சம் நேரம் வேகவையுங்க.வெந்ததும் இறக்கி வச்சிட்டு.மோதகம் பண்றதுக்கு அந்த மாவு வந்து கிண்ணம் போல் செய்யுங்க. கிண்ணம் போல வர்றத்துக்கு‌ மாவு பதமாக இருக்கா என்று பார்த்து ரெடி பண்ணி வச்சிக்குங்க. அப்படி இல்லைனா.நல்லா அந்த மாவை கையால் அழுத்தி பிசைங்க.அப்பதான்வெடிப்புவிடாமல்.அழகாக செய்ய வரும் .அதாவது உள்ளே பூரணம் வைத்து மூடுவதற்கு நன்றாக வரும்.உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் மோதகம் செய்து வச்சுக்கங்க ‌ இட்லி பானையில் இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு.பின் இட்லி தட்டில் ஒரு துணி போட்டு நம்ம செஞ்சு வெச்சிருக்கற மோதகம்.பிள்ளையார் கொழுக்கட்டைன்னு சொல்வாங்க அதை எடுத்து அதில் வைத்து. அடுப்பை பற்ற வையுங்க அஞ்சு நிமிஷம் வெந்ததும் எடுத்து கீழே வச்சிட்டு. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பாத்திரத்தில் எடுத்து வையுங்க. விநாயகருக்கு பிடித்த ஸ்வீட் ரெடிஉளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து தண்ணீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் ஜாரின் 4 பச்சை மிளகாய். இந்த உளுத்தம்பருப்பு உப்பு வைத்து. கொரகொரப்பாக அரைத்து .வாணலியை அடுப்பில் வைத்து. கடுகு. உளுந்து‌ கருவேப்பிலை. போட்டு வதக்குங்க.அதில் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் பருப்பை கலந்திடுங்க. வெந்து போயிடும். அரை மூடி தேங்காயைத் துருவி அதில் கலந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வையுங்க. இனிப்பு கொழுக்கட்டை எப்படி பண்றதுன்னு பார்த்தோம். அது போல தான் இந்த கார கொழுக்கட்டையும் செய்யனும்.மாவு ரெடி செய்து இந்த கார பூரணத்தை உள்ளே வைத்து மூடி வேக வைத்து எடுங்க கார கொழுக்கட்டை ரெடி.

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...