காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன் எண்ணைய் விடுங்க காய்ததும் பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து. வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து. உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம் .
பாதம் பச்சடி பாதாம் பருப்பு 20. பூண்டு 5. புளிக்காத தயிர் ஒரு கப். பச்சை மிளகாய் 2 (காரத்திற்கு ஏற்ப) கொத்தமல்லி சிறிதளவு. சர்க்கரை சிறிதளவு (1 டீஸ்பூன்)சீரகத்தூள் அரை டீஸ்பூன். பாதாம்பருப்பு 20 பாதாமை ஊற வைத்து ஊறவைத்து தோலுரித்து விட்டு.ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு (வேகவைத்து) அதில் பச்சை மிளகாய். தயிர். கொத்தமல்லித்தழை. சர்க்கரை.தோலுரித்த பாதாம் பருப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து அதில் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சீரகத்தூள் கலந்து வைக்கவும் பாதாம் பூண்டு பச்சடி ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 2வாரம் வரை சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக