பச்சரிசி ஒரு கிலோ தண்ணீர் விட்டு அலசி. கொஞ்ச நேரம் அந்த ஈரம் வெளில போற அளவுக்கு கொஞ்ச நேரம் வெள்ளைத்துணியில் போடுங்க.பிறகு ஒரு பாத்திரத்தில் மாத்துஙக. மெஷின்ல். அப்படி இல்லேன்னா நம்ம மிக்ஸியில் போட்டு அரைத்துங்க. அரைக்கும் போது கொரகொரப்பாக இருக்கலாம். அப்பதான் நல்லா இருக்கும்.உங்க விருப்பம்அரைத்துமுடிஞ்சதும்வெறும் வாணலியில் லேசாக வருத்துக்கனும். வெல்லம் 400 கிராம் இனிப்பு அதிகம் தேவைன்ன 500 கிராம். சுத்த பண்ணிட்டு பாகு காய்ச்சி.நல்லா கெட்டியானதும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அடுப்பில் இருக்கும் அந்த வெல்லப்பாகு கொஞ்சம் எடுத்து.அந்த கிண்ணத்தில் ஒரு துளி போடுங்க.அதுல விட்டத்துக்கு அப்புறம் ஒரு ரெண்டு செகண்ட் வெயிட் பண்ணுங்க அதுக்கப்புறம் கையில எடுத்து உருண்டு பந்து மாதிரி அது உருண்டு வரும் அந்த வெல்லப்பாகை இறக்கி விட்டு நீங்க மாவு பண்ணி வச்சிருக்கும். மாவை எடுத்து வெல்லப்பாகுடன் ஏலக்காய் 20 கிராம்.சேர்த்து நல்ல கிளறி விடுங்க. அப்படியே நல்ல கிளறி விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிடுங்கள். அதிரசமாவு ரெடி. அந்த அதிரச மாவை ஒரு நாள் நல்லா ஊறவிடுங்க.ஒரு நாளைக்கு பிறகு நீங்க என்ன பண்றீங்க. அடுப்பைப் பற்றவைத்து.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு. எண்ணெய் காய்ந்ததும்.வாழை இலையில் அதிரசம் மாவை எடுத்து தட்டி எண்ணெயில் போடுங்க. போட்டது கொஞ்சமும் உப்பலாக வரும். லேசாக திருப்பி விட்டு இன்னொரு கரண்டி எடுத்து அப்படியே எண்ணெய் வடிய விட்டு அதிரசம் சுட்டு அடுக்கி வையுங்க. சூப்பரான தீபாவளி பலகாரம் அதிரசம் ரெடி.
கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும். தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...
கருத்துகள்
கருத்துரையிடுக