முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

பன்னீர் பிரட் டோஸ்ட் & சுரைக்காய் மசாலா

பன்னீர் பிரட் டோஸ்ட்  வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய்  விடுங்க. மிளகாய்த்தூள்  ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.  ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட்   டோஸ்ட்  செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி.  சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து  வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து  வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...

Killu aṭai ( கில்லு அடை )

  புழுங்கல் அரிசி2கப்.பச்சரிசி1கப். இரண்டையும் நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் .அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து  அடை போல கனமாக  தோசைகளாக வார்க்கவும் .சிவக்க விடாமல் வெண்மையாக  சிம்மில் வைத்து ஊத்த வேண்டும். ஆறியவடன் அந்த தோசையை சின்ன சின்னதாக கில்லி ஒரு டப்பாவில் வைக்கவும். பிறகு 2 கப் துவரம்பருப்பு குக்கரில் அரை பதத்திற்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் சீரகம் 2 ஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்து. மிக்ஸியில் ஜாரில் ஒன்றிரண்டாக அரைக்கவும். 2 கப் தேங்காய் நைசாக துருவி எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நாம் வேக வைத்த துவரம்பருப்பை.  ஜாரில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு. கடுகு .சீரகம் .காய்ந்த மிளகாய் 10.கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும் பின் கில்லி வைத்த அடைபை சேர்த்து நன்றாக கிளறவும். அதில் துவரம் பருப்பு. தேங்காய் துருவல். சீரகப்பொடி அதில் சேர்க்கவும். தேங்காய் எண்ணெய் தேவையான அளவு சேர்த்து .எல்லா புறமும் நன்றாக கிளறி விட்டு மிருதுவாக வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.கில்லு அடை ரெடி. இரண்டு நாள் வைத்து சாப்பிடலாம். 



(  2 cups of parboiled rice. 1 cup of green rice. Soak both for four hours. Grind them in a grinder and take them. Add required amount of salt and make them into thick dosas like a pot. Do not let them brown and keep them in a pan until they are white. After cooling, cut the dosas into small pieces and keep them in a container. Then cook 2 cups of black gram in a cooker for half a minute. Fry cumin seeds in a pan without leaving any oil. Grind them in a jar in a mixer. Grate 2 cups of coconut finely. Take the black gram that we have cooked in the cooker. Grind them in a jar in half. Then put the pan in the stove and add oil. Add mustard seeds, cumin seeds, 10 dried chilies, and fry them well. Then add the black gram and stir well. Add dal to it. Grated coconut. Add cumin powder to it. Add coconut oil as required. Stir well from all sides and turn off the stove when it becomes soft. Killu adi is ready. It can be kept for two days and eaten.)



கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...