முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

காலிஃப்ளவர் மசாலா

  காலிஃப்ளவரை சுத்தம் செப்து எடுத்து வையுங்க. உருளைக்கிழங்கு தோலை சீவி சின்ன சின்னதாக நறுக்கி வையுங்க  அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து நாலு ஸ்பூன்  எண்ணைய் விடுங்க காய்ததும்  பட்டை. கிராம்பு. ஏலக்காய் தாளித்து.  வெங்காயம் 2 தக்காளி 2 முந்திரிபருப்பு இவற்றை  மிக்சியில் அரைத்து அதில் கலந்து பின் காலிபிளவர் .உருளைக்கிழங்கு. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன். மல்லித் தூள் ஒரு டீஸ்பூன். கரம் மசாலாத்தூள் . அதில் கலந்து கொஞ்சம் உப்பு தேவையான அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு .குக்கரில் 2 விசில் வைத்து. 10 நிமிடம் கழித்து. குக்கரின் மூடியைத் திறந்து.  உருளைக்கிழங்கு நன்றாக மசித்து விடவும் . பின் எண்ணைய் பிரியும்போது ஒரு பாத்திரத்தில் மாற்றி. அதன் மேலே இரண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும். சூப்பரான கமகம காலிஃப்ளவர் மசாலா ரெடி பிரியாணி.சப்பாத்தி .நாண்.பூரி இது எல்லாத்துக்கும் சேர்த்து  சாப்பிடலாம் .

பாரம்பரிய மண் பானை சமையல் இருந்து opos ஆரோக்கியமான எப்படி?

 

பாரம்பரிய மண் பானை சமையலில் இருந்து Opos எப்படி ஆரோக்கியமானது? இதுபோல நிறைய பேர் கேள்வி கேட்டுட்டு இருக்காங்க ரொம்ப ஈசியா சொல்லனும்னா .நம்ம முன்னாடி எல்லாம்  ஒரு பெரிய குக்கரில் .உள்ளே வச்சு எடுக்க .4 அடிக்கு ஒரு கேரியர் மாதிரி பாத்திரம் அதையும் சேர்த்து தான் கொடுப்பாங்க. இப்ப மண்பாண்டங்களில் செய்யக்கூடிய குக்கர் கூட கிடைக்கிறது  அதில் எப்படி சமையல் செய்யலாம்  தெரியுமா? நம்மளும் தெரிஞ்சுக்கலாம் வாங்க .இப்ப சாம்பார் காய்கறிகளை ரெடி செய்து முதல் அடுக்கில் வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் சாம்பார்த்தூள் வெங்காயம். பச்சை மிளகாய். துவரம் பருப்பு .உப்பு .புளித் தண்ணீர்.ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு .ஒரு அடுக்கு ரெடி. இரண்டாவது அடுக்கில் பொரியல். உப்பு .காரம் சேர்த்து .அரை டம்ளர் தண்ணீர் விடவும் இரண்டாவது அடுக்கு ரெடி .மூன்றாவது அடிக்கு கூட்டு செய்வதற்கு தேவையான காய்கறிகளை நறுக்கி அதில் உப்பு. காரப்பொடி .பருப்பு தேங்காய் பேஸ்ட் .சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்றாவது அடிக்கு ரெடி. நாலாவதுஅடுக்கில்  தேவையான காய்கறிகள் உருளைக்கிழங்கு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகள் .அதுல கொஞ்சம் காரம். உப்பு. மிளகாய் தூள் .ஒரு பெரிய வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு .சிறிதளவு தண்ணீர் சேர்த்து. நான்கு அடுக்குகளையும் ஒன்றாக இணைத்து ரெடி.செய்யவும். பெரிய குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விடுங்கள் இப்போ நம்ம சரி பண்ணி வச்சிருக்க கேரியர் அடுக்கு அதை எடுத்து. குக்கரில் தூக்கி வையுங்க .இப்ப மூடி மூன்று விசில் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு. பத்து நிமிஷம் கழிச்சு திறந்து பாருங்க.தண்ணீர் சேர்த்து சரி பண்ணிக்கோங்க. ஈசியான சமையல் சீக்கிரம் செய்து முடித்து விடலாம் .இந்த சமையல் என்னன்னா எண்ணெய் அதிகம் தேவையில்லை . 2 ஸ்பூன் எண்ணெய் போட்டு கடுகு. கருவேப்பிலை தாளித்து எல்லாவற்றிலும் சேர்த்திடுங்க  

கருத்துகள்

www.kalaireal360.xyz

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...