இன்றைய அவசர உலகில் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை ரத்த சோகை மற்றும் உடல் சோர்வு. மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் சத்தான பொருட்களைக் கொண்டு ரத்தத்தின் அளவை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். 3. தேவையான பொருட்கள் (Ingredients List): * நிலக்கடலை - 100 கிராம் * உலர்ந்த திராட்சை - 100 கிராம் * முந்திரி பருப்பு - 100 கிராம் * பேரிச்சம் பழம் - 100 கிராம் * வெல்லம் - 25 கிராம் (தேவைக்கேற்ப) * வெண்ணெய் - 10 கிராம் 4. செய்முறை விளக்கம் (Step-by-Step Instructions): * முதலில் நிலக்கடலை மற்றும் முந்திரியை லேசாக வறுத்துக்கொள்ளவும் (இது சுவையைக்கூட்டும்). * பேரிச்சம் பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கவும். * மிக்ஸி ஜாரில் நிலக்கடலை, முந்திரி, திராட்சை, பேரிச்சை, வெல்லம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்க்கவும். * அனைத்தையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். * அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். * ஒரு சுத்தமான டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் (Fridge) வைத்துப் பாதுகாக்கவ...
அரைத்து விட்ட சாம்பார்
&
கொள்ளு மசியல்
தேவையானவை: துவரம் பருப்பு, விருப்பமான காய்கறிக் கலவை (நறுக்கியது) - தலா ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சிறிதளவு, புளி - நெல்லிக்காயளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தனியா, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன். (இவற்றை வெறும் வாணலியில் வறுத்து அரைக்கவும்).
செய்முறை: புளியை ஊற விடவும். பருப்புடன் மதூள் சேர்த்து குழைய வேகவிடவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, காய்கறிகள், சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும், பின்னர் அரைத்த விழுது, பருப்புக் கலவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொள்ளு மசியல்
தேவையானவை: கொள்ளு
ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 4, பூண்டு - 5 பல், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. ஒரு சிட்டிகை,
செய்முறை: கொள்ளுடன் கலந்திருக்கும் கற்களை
நீக்கி, 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். கொள்ளு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டி பரிமாறவும்
கருத்துகள்
கருத்துரையிடுக