ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
 கோதுமை மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், மைதா மாவு - 3 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள், நல்லெண்ணெய், வாழை இலை - தலா சிறிதளவு.
தேவையானவை:
செய்முறை: அகலமான பேசினில் கோதுமை மாவு, மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாகப் பிசைந்து, அதன் மேல் நல்லெண்ணெய் முழுவதையும் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வெறும் வாணலியில் கொட்டி, ஈரம் வற்றும் வரை வறுக்கவும்.. பின் அந்த கலவையை ஆற வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டவும். அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி மறுபடியும் வட்டமாக தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு வாழை இலையை எடுத்து விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் மேலே நெய் தடவி பறிமாறவும்.
                      அரைத்த பஜ்ஜி
 அரைத்த பஜ்ஜி தேவையானவை:
 புழுங்கல் அரிசி, கடலை மாவு தலா 1 கப், துவரம் பருப்பு <-1 டீஸ்பூன், வாழைக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு. கத்தரிக்காய் (நான்கும் தோல் சீவி வட்டமாக மெலிதாக நறுக்கியது) தலா 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 3, தோசைமாவு,ங்காயத்தூள், கறிவேப்பிலை 
 செய்முறை..புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். பின்லர் அதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பாதியளவு நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலைமாவு, தோசை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும். 
கருத்துகள்
கருத்துரையிடுக