பன்னீர் பிரட் டோஸ்ட் வாணலியை அடுப்பில் வைத்து .அதில் 2 ஸ்பூன் எண்ணைய் விடுங்க. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் போடுங்க .கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன். உப்பு சிறிது. பன்னீர் 100 கிராம் துருவி போடுங்க. பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு பிரெட் எடுத்து அதில் பன்னீர் ஃப்ரை வைங்க. அதன் மேலே இன்னொரு பிரட்டை வையுங்கள் அதன் ஓரத்தை மைதா மாவு பேஸ்ட் வச்சி அப்படியே மூடுங்க அப்ப தான் உள்ளே உள்ள பன்னீர் கீழே கொட்டாமல் இருக்கும் தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் நெய் விட்டு பிரட் டோஸ்ட் செய்து எடுத்து வையுங்கள் . பன்னீர் ப்ரெட் டோஸ்ட் ரெடி. சுரைக்காய் 1 தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் .வெங்காயம் 4 .தக்காளி தக்காளி 5. பச்சைமிளகாய் 3 நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும். வெந்தயம். சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி. இதனுடன் சுரக்காய். சிறிதளவு உப்பு. மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் .தனியா தூள் அரை ஸ்பூன் ...
கோதுமை மாவு, தேங்காய்த்துருவல் - தலா 1 கப், மைதா மாவு - 3 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள், நல்லெண்ணெய், வாழை இலை - தலா சிறிதளவு.
தேவையானவை:
செய்முறை: அகலமான பேசினில் கோதுமை மாவு, மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் தளர்வாகப் பிசைந்து, அதன் மேல் நல்லெண்ணெய் முழுவதையும் ஊற்றி 3 மணி நேரம் மூடி வைக்கவும். தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு, அதனுடன் ஏலக்காய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த விழுதை வெறும் வாணலியில் கொட்டி, ஈரம் வற்றும் வரை வறுக்கவும்.. பின் அந்த கலவையை ஆற வைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கோதுமை மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து வட்டமாக தட்டவும். அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி மறுபடியும் வட்டமாக தட்டி, சூடான தோசைக் கல்லில் போட்டு வாழை இலையை எடுத்து விடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வெந்ததும் மேலே நெய் தடவி பறிமாறவும்.
அரைத்த பஜ்ஜி
தேவையானவை: புழுங்கல் அரிசி, கடலை மாவு தலா 1 கப், துவரம் பருப்பு <-1 டீஸ்பூன், வாழைக்காய், பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு. கத்தரிக்காய் (நான்கும் தோல் சீவி வட்டமாக மெலிதாக நறுக்கியது) தலா 4 துண்டுகள், காய்ந்த மிளகாய் - 3, தோசைமாவு,ங்காயத்தூள், கறிவேப்பிலை
செய்முறை..புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். பின்லர் அதனுடன் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பாதியளவு நைஸாக அரைக்கவும். பின்னர் அதனுடன் கடலைமாவு, தோசை மாவு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக