ஒரு லிட்டர் பால் நல்லா கொதிச்சதும்.அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்க.பிறகு பால் திரிந்ததும்.அதை ஒரு வெள்ளைத்துணியில் எடுத்து நல்லா பிழிஞ்சி மூட்டையாக கட்டி தண்ணீரை வடியவிடவும்.பின்அதை விரிச்சு 2 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உள்ள புளிப்பு போனதும் அதுக்கப்புறம் அதை மறுபடியும் பிழிந்துவிட்டு ஒரு பாத்திரத்தில் போடுங்கள். மிருதுவான பதம் வரும் வரையில் நன்றாக பிசைந்து. சின்ன சின்ன பால் அளவுக்கு ரவுண்டாக உருட்டி ஒரு பிளேட்டில் வையுங்கள். அடுப்பை பற்றவைத்து. 3 டம்ளர் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்க அதில் 250 கிராம் சீனியை சேருங்கள்.உருட்டி வெச்சிருக்கும் அந்த ரசகுல்லாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போடுங்க. தண்ணீரிலேயே வேகட்டும் 25 நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்திடுங்க.நாலு மணி நேரம் ஊற வையுங்க. மிருதுவான ரசகுல்லா ரெடி.
தேவையானவை:
கத்தரி - கிரேவி
சின்ன சைஸ் கத்தரிக்காய் - 5. தக்காளி - 1, வெங்காயம் - 2, இஞ்சி, பூண்டு விழுது ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீர்பூன்,தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன், தயிர் புதினா - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தக்காளி
4. டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 4
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் தூள் வகைகளைச் சேர்த்து வதக்கவும், அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும், பின்னர் , தயிர், மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும், வெந்ததும் கத்தரிக்காயைச் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை சுருள வேகவிட்டு இறக்கவும். விரும்பினால் கடைசியாக சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக