முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

https://kalaireal.blogspot.com

மஸ்ரூம் மசாலா & பன்னீர் மசால் தோசை

 மஸ்ரூம் மசாலா மஸ்ரூம் ஒரு பாக்கெட் சுத்தம் பண்ணி எடுத்து வைங்க. பிரஷர் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஒரு குழிகரண்டி விட்டு பட்டை. கிராம்பு. .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன். சேர்த்து நல்லா வதக்குங்கள். வெங்காயம் 2.தக்காளி 2 நைசாக பொடி கட் செய்து. அதில் சேர்த்து நல்லா வதக்குங்க.ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள். அரை டீஸ்பூன் மல்லித்தூள்.கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன். மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க. இப்ப சுத்தம் பண்ணி வச்சிருக்கும் மஸ்ரூம் சேருங்க கசகசா அரை டீஸ்பூன் .தேங்காய் 1ஸ்பூன் மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து கிரேவியில் விடவும் எண்ணெய் பிரிந்து வரும்போது இருக்குங்க. மஸ்ரூம் மசாலா ரெடி  பன்னீர் மசால் தோசை வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம். பச்சைமிளகாயை போடுங்க நன்றாக வதங்கியதும் கொஞ்சம் உப்பு. மிளகாய்த்தூள். மல்லித்தூள். சீரகத்தூள் கரம் மசாலா தல அரை ஸ்பூன். 100 கிராம் அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மூன்று ஸ்பூன் நெய் விடவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.தோசை மாவு ஒரு கப்.தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. காய்ந்ததும் நை...

ஃபிரைடு பொடி இட்லி, மினி சமோசா! சுவையான 5 ரோட்டுக்கடை உணவு ரெசிபிகள். &அத்தோ

 ஃபிரைடு பொடி இட்லி


நான்கு கப் இட்லி மாவை, மினி இட்லித் தட்டில் ஊற்றி, ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடாக இருக்கும் போதே அகலமான பாத்திரத்தில் கொட்டி, இட்லி மிளகாய்த்தூள், நெய் தலா கால் கப் சேர்த்து நன்றாக குலுக்கவும். இட்லிப்பொடியும் நெய்யும் அனைத்து இட்லிகளிலும் நன்றாக படுமாறு குலுக்கிவிட்டு, கொத்துமல்லிச் சட்னி (அ) புதினா சட்னியுடன் பரிமாறவும்.

மினி சமோசா

ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் மைதா மாவு, 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, 20 நிமிடம் ஊற விடவும், பின்னர் அதை சிறுசிறு வட்டமாக உருட்டி, சப்பாத்தி போல திரட்டி, தவாவில் போட்டு உடனே திருப்பிவிட்டு எடுக்கவும். இந்த சப்பாத்திகளை கோன் மாதிரி செய்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயத்தை ஒரு கப் எடுத்து, டிஷ்யூ பேப்பரில் பரப்பி, 10 நிமிடம் கழித்து எடுக்கவும். இதனுடன் கால் கப் அவல், சாட் மசாலா, சீரகத்தூள் தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சைமிளகாய் தலா ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஸ்டஃபிங்கை ஸ்பூன் அளவு எடுத்து, செய்து வைத்துள்ள கோனுக்குள் ஸ்டஃப் செய்யவும். முக்கோணமாக மடிக்கவும். 8 டேபிள் ஸ்பூன் மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்து திக்காக கரைத்து, செய்து வைத்துள்ள முக்கோணங்களின் ஓரங்களை ஒட்டவும். பின்னர் இவற்றை நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

எங்கே கிடைக்கும்?

சென்னையிலுள்ள மிகவும் பிரபலமான அண்ணா சாலையில் இந்த சமோசாவை பச்சைச்சட்னியுடன் சுவைக்கலாம்.

அத்தோ

இரண்டு கப் நாடுல்ஸை குழையாமல் வேக வைத்து, குளிர்ந்த நீரில் போட்டு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் கால் கப் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பின்னர் பூண்டு 6 பற்கள் சேர்த்து பொரித்து எடுக்கவும். வெந்த நூடுல்ஸுடன், வெங்காயம் - பூண்டு பொரித்த எண்ணெயை 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி கலந்து, மேலாக சிறிதளவு உப்பை தூவவும். பின்னர் மெலிதாக நறுக்கிய முட்டைக்கோஸ் கால் கப் சேர்த்து, வறுத்து கொரகொரப்பாக அரைத்த காய்ந்த மிளகாய்த் தூளை சிறிதளவு சேர்த்து, பொரித்த வெங்காயம், பூண்டை சேர்க்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு, பொட்டுக்கடலை மாவு, வேர்க்கடலை மாவு தலா 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையை 2 டேபிள் ஸ்பூனளவு தூவி அலங்கரித்து பரிமாறவும்.

எங்கே கிடைக்கும்?

பர்மாவில் பிரசித்தி பெற்ற 'அத்தோ'வானது சென்னை பர்மா பஜாரிலும் அதே சுவையுடன் கிடைக்கும்!

பொடி ஊத்தப்பம்

நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கப், நறுக்கிய குடைமிளகாய், நறுக்கிய கேரட் தலா கால் கப், பொடியாக நறுக்கிய புதினா 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லி 3 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைக்கவும். இட்லி மாவு 4 கப், நெய், இட்லி மிளகாய்த்தூள் தலா கால் கப் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். தவாவில் சிறிதளவு நெய் தடவி, இட்லி மாவை ஒரு கரண்டி ஊற்றவும். ரெடி செய்து வைத்துள்ள காய்கறி கலவையை 2 ஸ்பூன் மேலாக பரப்பி, அதன் மேல் சிறிதளவு இட்லி மிளகாய்த்தூளை தூவி, மேலாக கொஞ்சம் நெய் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் நன்றாக வேக வைத்து எடுத்து, கொத்துமல்லிச் சட்னி (அ) புதினாச் சட்னியுடன் பரிமாறவும்.

காலிஃபிளவர் பஜ்ஜி

சுத்தம் செய்த காலிஃபிளவர் 2 கப் எடுத்துக் கொள்ளவும். அடிகனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, காலிஃபிளவர் துண்டுகளை போட்டு அரைவேக்காடாக பொரித்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, சிவப்பு மிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன், சமையல் சோடா மற்றும் பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளை, கரைத்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக முக்கி எடுத்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, சட்னியுடன் பரிமாறவும்.

குலுக்கி சர்பத்

இரண்டு டீஸ்பூன் சப்ஜா விதைகளை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில், சர்க்கரை, தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கி ஆற வைக்கவும். இந்த பாகை சுத்தமான பாட்டிலில் ஊற்றி, இரண்டு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். பின்னர் 2 பச்சைமிளகாயை கீறி சேர்த்து, கால் கப் ஐஸ் கட்டிகள், ஊறிய சப்ஜா விதைகளை சேர்த்து நன்றாக குலுக்கவும். பரிமாறுவதற்கு முன்பாக, ஊறிய ஜப்ஜா விதைகள் இரண்டை, அலங்கரித்து பரிமாறவும்.

பனானா பிரிட்டர்ஸ்

இரண்டு வாழைக்காயைத் தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் இரண்டு கப் கடலை மாவு, கால் கப் அரிசி மாவு, சீரகம், மஞ்சள் தூள், சமையல் சோடா, பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன், 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது ஆகிய வற்றுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இந்த கரைசலில், நறுக்கிய வாழைக்காயை தோய்த்து எடுத்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, சட்னியுடன் பரிமாறவும்.

ஆப்பம்

வெதுவெதுப்பான தண்ணீர் கால் கப் எடுத்துக் கொள்ளவும். இதில் ஈஸ்ட் கால் டீஸ்பூன், சர்க்கரை ஒரு டேபிள் ஸ்பூன் இரண்டையும் 20 நிமிடம் ஊற விடவும். ஒரு கப் பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். இதனுடன், ஈஸ்ட், சர்க்கரை ஊறியதை தன்ணீருடன் சேர்த்து, தேங்காய்த்துருவல், வெந்த சாதம் தலா அரை கப், தேவையான அளவு உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்தில் கரைத்து, 6 மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் சூடான ஆப்பச்சட்டியில் ஒரு கரண்டி அளவு மாவை ஊற்றி சுழற்றவும். ஓரங்களில் லேசாக எண்ணெய் விட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

உண்டம் பொரி

4

முக்கால் கப் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி, கல், மணல் போக வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் மைதா ஒரு கப், அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், சிறிதளவு உப்பு, கால் டீஸ்பூன் சமையல் சோடா சேர்க்கவும். பின்னர் ஒரு நேந்திரம்பழத்தை மிக்ஸியில் மசித்து சேர்த்து, வெல்லப்பாகை ஊற்றி பிசையவும். இந்த மாவுக் கலவையானது சப்பாத்தி மாவைவிட சற்றுத் தளர்வான பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு மணி நேரம் புளிக்க விடவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை, சிறிய போண்டாக்களாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கேழ்வரகுக்கூழ்

அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டு, கால் கப் பச்சரிசி நொய்யை சேர்த்து வேக விடவும். இரண்டு கப் கேழ்வரகு மாவுடன் சம அளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, வெந்து கொண்டிருக்கும் நொய்யுடன் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஒரு கப் கெட்டித் தயிரை கடைந்து மோராக்கி, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்த கூழுடன் கலக்கவும்.

டிகிரி காபி

கால் கப் வெந்நீரைக் கொதிக்க விடவும். காபி ஃபில்டரில் 5 டேபிள் ஸ்பூன் காபித்தூளும் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, டிகாஷனை இறக்கவும். அதே காபி ஃபில்டரில் மறுபடியும் கொஞ்சம் வெந்நீர் விட்டு டிகாஷனை இறக்கி, இரண்டு விதமான டிகாஷன்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். 2 கப் அளவுள்ள திக்கான பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, தேவையான அளவு டிகாஷன், சர்க்கரை சேர்த்து சூடாக பரிமாறவும்.

கந்தரப்பம்

கால் கப் புழுங்கல் அரிசி, ஒரு கப் பச்சரிசி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு 4 டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். பாதியளவு அரைபட்டதும், தேங்காய்த்துருவல் கால் கப், ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து, அரைத்து முடித்து எடுப்பதற்கு முன்பாக, துருவிய வெல்லம் இரண்டு கப் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெயை காயவைத்து, அரைத்த மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். இருபுறமும் திருப்பிவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

ஒப்பட்டு

மைதா மாவு, சிரோட்டி ரவை தலா ஒரு கப், நல்லெண்ணெய் கால் கப், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவை விட சற்றே தளர்வாக பிசைந்து, ஒரு மணி நேரம் ஊற விடவும். அடிகனமான வாணலியில், துருவிய வெல்லம் 2 கப் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கல்,மணல் போக வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒன்றரை கப் தேங்காய்த்துருவல், 5 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி, கைகளால் உருட்டும் பதம் வந்ததும் இறக்கவும். பிசைந்து வைத்துள்ள மேல் மாவினையும், பூரணத்தையும் தனித்தனி உருண்டைகளாக உருட்டவும். முதலில் மேல் மாவு உருண்டை ஒன்றை எடுத்து, வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டி, நடுவே பூரண உருண்டையை வைத்து மூடி வட்டமாக தட்டவும். இதை காய்ந்த தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் சிறிதளவு நெய் விட்டு, இருபுறமும் நன்றாக திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்

போஹா

இரண்டு கப் அவலை நன்றாகக் கழுவி, அதன் மேலே சர்க்கரை, எலுமிச்சைச்சாறு தலா 2 ஸ்பூன் சேர்த்து கலந்து வைக்கவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள் தலா ஒரு டீஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 பச்சைமிளகாயையும் ஒரு தக்காளியையும் நறுக்கி சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, கலந்து வைத்துள்ள அவலை சேர்த்து கிளறி, 2 டேபிள் ஸ்பூன் கசூரி மேத்தி தூவி இறக்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, மேலாக தூவி பரிமாறவும். 



  தொடரும் ......,

கருத்துகள்

www.kalaireal360.xyz

கத்தரிக்காய் புலாவ்&தக்காளி புலாவ்&ஜீரா புலாவ் &காஷ்மீரி புலாவ்

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.   தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: அரிசியைக் களை...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

இலை அடை & உன்னியப்பம் & ஷாஹி துக்டா

 இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூடுபடுத்திக் கொண...