5 நிமிடத்தில் 4 ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் ரெசிபிகள்: பச்சைமிளகாய் துவையல் முதல் அடை மிக்ஸ் வரை!" பச்சைமிளகாய் துவையல் ரெடி. & எள்ளு துவையல் & ரவா மிக்ஸ் & அடை மிக்ஸ்
பச்சைமிளகாய் துவையல் ரெடி.
பச்சைமிளகாய் துவையல் (Green Chilli Thuvaiyal)
இதன் காரமான சுவை மற்றும் தயிர் சாதத்திற்கு இது எவ்வளவு பொருத்தமானது
பச்சை மிளகாய் 10. உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன். எண்ணெயில் வதக்கி .உப்பு.பெருங்காயத்தூள்.சிறிது.1 பிடி மல்லி இலை.சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைக்கவும். பச்சைமிளகாய் துவையல் ரெடி.
எள்ளு துவையல்
எள்ளு துவையல் (Ellu Thuvaiyal)
எள்ளின் ஆரோக்கிய நன்மை இரும்புச்சத்து அதிகம்
எள்ளு 4 ஸ்பூன் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து காய்ந்த மிளகாய் 5 உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன் சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிதளவு புளி உப்பு தேவையான தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். . எள்ளு துவையல் ரெடி. (இதில் தண்ணீர் விடாமல் அரைத்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். எள்ளு சாதம் செய்யலாம் )
ரவா மிக்ஸ்
இன்ஸ்டன்ட் ரவா & அடை மிக்ஸ் (Instant Mixes)
வேலைக்குச் செல்பவர்களுக்கும், பேச்சலர்களுக்கும் இது உதவும்
ரவா 1கிலோ பச்சரிசி 500 கிராம். மைதா 500 கிராம். மிளகு 25 கிராம். சீரகம் 25 கிராம் இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேவையானபோது எடுத்து அரை மணி நேரத்திற்கு முன்பு சற்று நேரம். தண்ணீர் விட்டு ஊற வைத்து. வெங்காயம் .பச்சை மிளகாய். இஞ்சி .உப்பு சேர்த்து ரவா தோசை செய்யலாம் தக்காளி சட்னி தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
அடை மிக்ஸ்
கடலைப்பருப்பு 500 கிராம். துவரம் பருப்பு 250 கிராம். உளுத்தம் பருப்பு 150 கிராம். மிளகாய் 100 கிராம் இவை அனைத்தையும் நைசாக அரைத்து . டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். அடை ஊற்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு. தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வெங்காயம். பச்சை மிளகாய். இஞ்சி நைஸாக அரிந்து போடவும். பெருங்காயத்தூள். கருவேப்பிலை. உப்பு சேர்த்து நன்றாக கரைத்து வைக்கவும். தோசைக்கல்லைகாயவைத்து .கல் காய்ந்ததும் அதில் உங்கள் விருப்பம் போல் நைசாக அடை ஊற்றவும். இரண்டு புறமும் வெந்ததும் ஒரு பிளேட்டில் வைத்து தேங்காய் சட்னி. அவியல். வெண்ணெய் வெல்லம் தொட்டு சாப்பிடும்போது நன்றாக இருக்கும் .அடை ரெடி .அடை மிக்ஸ் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக