டிபன் சுண்டல்
ஒரு கப் பச்சரிசி. அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும் அடுப்பை பற்ற வைத்து குக்கரை அடுப்பில் வைத்து.. இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் கடுகு. உளுத்தம்பருப்பு. பச்சை மிளகாய்.5. வெங்காயம் 2.கடலைப்பருப்பு. இஞ்சி. கருவேப்பிலை. தேவையான அளவு உப்பு.( விருப்பப்பட்டால் காய்கறிகள் கேரட். உருளைக்கிழங்கு .பட்டாணி. உங்கள் விருப்பம் போல சேர்த்துக்கொள்ளலாம்.) சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிக்ஸியில் நாம் வறுத்து வைத்திருந்த பச்சரிசியை இரண்டு ஒன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து. குக்கரில் வதக்கி வைத்திருக்கும் கலவையுடன். ஒரு கப் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் வைத்து. 3 விசில் வைத்து இறக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மல்லித் தழை தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுண்டல் ரெடி. விருப்பப்பட்டால் தேங்காய் ஒரு மூடி துருவி. பரிமாறும்போது அதன் மேல் போட்டு. ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். இல்லை என்றால் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஊறுகாய். இவற்றுடன் சாப்பிடலாம்.
தயிர் டிக்கா
தயிர் ஒரு கப் வெள்ளைத்துணியில் நீர்வடிய முடிந்து வைக்கவும். பொட்டுக்கடலை ஒரு ஸ்பூன். காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். கரம் மசாலா அரை டீஸ்பூன். கான்பிளவர் ஒரு ஸ்பூன் . சர்க்கரை ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு கால் கிலோ. தோல் உரித்து சுத்தம் செய்து மசித்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் 2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன். உப்பு.தண்ணீர் சிறிதளவு சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து. சிறிய உருண்டைகளாக தட்டி. பின்னர் அடுப்பில் தவாவை வைத்து அதில் டிக்கா வைத்து. சுற்றிலும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சுட்டு எடுக்கவும் .ஒரு தட்டில் டிக்கா வைத்து அதன்மேல். தயிரில் இரண்டு ஸ்பூன் குங்குமப்பூ கலந்து. அதன்மேல் வைத்து ஓமம் சிறிது அதன் மேல் தூவி சாப்பிடலாம். தயிர் டிக்கா ரெடி.
தேங்காய் இல்லாத சட்னி
பச்சை மிளகாய் 8. பெரியவெங்காயம் 4. கடலைபருப்பு 4 டேபிள் ஸ்பூன். வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும் .புளி சிறிதளவு. உப்பு தேவைக்கு ஏற்ப இவை அனைத்தையும் நைசாக அரைத்து. ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .பிறகு கடுகு கருவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும். தேங்காய் இல்லாத சட்னி ரெடி.
கருத்துகள்
கருத்துரையிடுக