மட்டர் பன்னீர் மசாலா
பட்டாணி ஒரு கப் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு. காய்ந்ததும் பட்டை. சீரகம். ஏலக்காய் .கிராம்பு .இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து .அதில் இரண்டு தக்காளி. 2 வெங்காயத்தை நைசாக பொடி செய்து சேர்க்கவும். பிறகு அதில் 1. ஸ்பூன் மிளகாய்தூள். 1 ஸ்பூன் மல்லித் தூள். அரை ஸ்பூன் சீரகம்.கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்.உப்பு சேர்த்து வேகவைத்த பட்டாணி.100 கிராம் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் 10 முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து.குக்கரில் உள்ள கிரேவியில் சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.எண்ணெய் பிரிந்து வெளியில் வரும்போது இறக்கவும்மட்டர் பன்னீர் மசாலா ரெடி. பாத்திரத்தில் மாற்றி இரண்டு ஸ்பூன் நெய் விடவும்.
டபுல் பீஸ் மசாலா
இஞ்சி 1துண்டு பூண்டு 4.பல் மிளகாய்த்தூள் 2 ஸ்பூன் தனியா தூள்1. ஸ்பூன் முந்திரிபருப்பு 10 மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் .அதில் சீரகம். கறிவேப்பிலை .சோம்புத்தூள் அரை ஸ்பூன். கரம் மசாலா கால் டீஸ்பூன் தாளித்து அதில் வெங்காயம் 2. தக்காளி 2 சின்னதாக நறுக்கி அதில் சேர்க்கவும். பிறகு டபுள் பீஸ் தோலுரித்து 100.கிராம் . பட்டாணி ஒரு கப் .தண்ணீர் அரை டம்ளர். உப்பு .அரைத்த விழுது களையும் அதில் சேர்க்கவும் .பிறகு குக்கரை மூடி 2 விசில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பிறகு குக்கரை திறந்து. இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். அதில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் .டபுள் பீஸ் மசாலா ரெடி.
தால் சப்பாத்தி
கடலைப்பருப்பு1 கப் குக்கரில் தண்ணீர் விட்டு. ஒரு விசில் வைக்கவும் .பிறகு தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதனுடன் 300 கிராம் சர்க்கரை .ஏலக்காய் பொடி 10 கிராம் சேர்த்து நைசாக அரைக்கவும். பிறகு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும் .1 கப் மைதா 1. கப் கோதுமை மாவு .உப்பு சேர்த்து மாவுவை பிசைந்து வைக்கவும் . 15.நிமிடம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக செய்து.. நடுவில் பருப்பு சர்க்கரை சேர்த்து அரைத்து அந்த கலவையை இரண்டு ஸ்பூன் வைத்து. அதன் மேல் இன்னொரு சப்பாத்திகயைஅதன் மேல் வைத்து மூடி இரண்டு புறமும் நன்றாக தேய்த்து. தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். சப்பாத்திகளை அதன்மேல்மூடி இரண்டு பக்கமும் சிவக்க வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு எடுக்கவும். தால் சப்பாத்தி ரெடி
கருத்துகள்
கருத்துரையிடுக