முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

https://kalaireal.blogspot.com

குடைமிளகாய் ஃபிரை &வாழைக்காய் ஃப்ரை & பாகற்காய் ஃபிரிட்டர்ஸ்

  குடைமிளகாய் ஃபிரை தேவையானவை: குடைமிளகாய், தக்காளி - தலா 1. வெங்காயம் - 2, மிளகு சீரகத்தூள், தனியாத்தூள் - தலா 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், சதுரமாக நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், வெங்காயத்தாள், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் மிளகு, சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.  வாழைக்காய் ஃப்ரை தேவையானவை: வாழைக்காய் - 2, பிரெட் துண்டுகள் - 3, துருவிய காலிஃபிளவர் - அரை கப்,கரம்மசாலாத்தூள், மாங்காய்த்தூள், இட்லி மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், நெய் - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு.  வாழைக்காய் தோல் சீவி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து, நீரை பிழிந்து, அதை வாழைக்காயோடு சேர்க்கவும். பின்னர் நெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து, பிசைந்து விருப்பமான வடிவில் தட்டி, சூடான நெய்யில் பொரித்து எடுக்கவும். பாகற்காய் ஃபிரிட்டர்ஸ் தேவையானவை: பெரிய சைஸ் பாகற்காய் - 2, சோள மாவு, மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன், இஞ...

மேதி டேப்ளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாம்

  வெந்தயக்கீரை ஒரு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தது மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்  அரை ஸ்பூன்  கோதுமை மாவு 250 கிராம் கடலைமாவு 2 டேபிள்ஸ்பூன் எல்லாவற்றையும் லேசாக சூடாக்கவும் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சூடு ஆறியதும் அதிலும் அரைக் கப் தயிர் நாம் அறிந்து வைத்திருக்கும் வெந்தியக்கீரை தேவையான அளவு சீனி 2 ஸ்பூன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும் 15 நிமிடம் கழித்து சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக செய்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும். தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் சிவக்க விட்டு  அதன் மேல் நெய் தடவி பரிமாறலாம் சைடிஷ் வந்து நிறைய நமது பிளாக்கில் நிறைய போஸ்ட் போட்டிருக்கேன்.பன்னீர் பட்டர் மசாலா. கோபி மசாலா.  முட்டைகோஸ் மசாலா.நிறைய.... போட்டு இருக்கேன் நிறைய நிறைய சொல்லிட்டே போகலாம்.  எது உங்களுக்கு பிடிக்குமோ  நீங்க டைப் பண்ணினால்வரும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க பண்ணிக்கலாம் இப்போ மேதி டேபிளா ரெடி. 

தால் பூரண்எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க.

  தால் பூரண் சப்பாத்தி சூப்பராக இருக்கும்.  எல்லாருக்கும் பிடிக்கும். எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம் வாங்க. கோதுமை மாவு ஒரு கப். மைதா மாவு ஒரு கப். உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு  போல் பிசைந்து வைக்கவும். கடலைப்பருப்பு ஒரு கப். குக்கரில் ஒரு விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் ஜாரின் கால் கப் சீனி. 10 ஏலக்காய் சேர்த்து  அரைத்துக்கொள்ளவும இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் .பிசைந்து வைத்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து சப்பாத்திகளாக தேய்த்து. அதன் நடுவில் இந்த பருப்பு உருண்டை வைக்கவும். அதை மூடி கோதுமை மாவை தொட்டு மறுபடியும் சப்பாத்திகளாக தேய்க்கவும். அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து. சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.அதன் மேல் நெய் தடவி அடுக்கவும். தால் பூரண் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள ஜாம். இனிப்புச் சட்னி .உங்களுக்கு விருப்பப்பட்ட குருமா சேர்த்து சாப்பிடலாம் .அடுத்து இனிப்புச் சட்னி எப்படி பண்றதுனு தெரிஞ்சிக்கலாம்.

இனிப்பு சட்னி செய்யலாம்

  பச்சை மிளகாய் 3. புளி சிறிதளவு .உப்பு தேவையான அளவு  பேரிச்சை 25 கிராம். (அரைக்க முடிவிவ்லை என்றால் லயன்டேட்ஸ் சிரப் உபயோகிக்கலாம் ). வெல்லம் இனிப்புக்கு தேவையான அளவு.  முந்திரி  10 இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும் ஒருவாரம் வரை  கெட்டுப் போகாமல் இருக்கும் ப்ரிஜ்ல் வைத்து உபயோகம் பண்ணுங்க.

பாதாம் பச்சடி

 பாதம் பச்சடி பாதாம் பருப்பு 20. பூண்டு 5. புளிக்காத தயிர் ஒரு கப். பச்சை மிளகாய் 2 (காரத்திற்கு ஏற்ப) கொத்தமல்லி சிறிதளவு. சர்க்கரை சிறிதளவு (1 டீஸ்பூன்)சீரகத்தூள் அரை டீஸ்பூன். பாதாம்பருப்பு 20 பாதாமை ஊற வைத்து ஊறவைத்து தோலுரித்து விட்டு.ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு (வேகவைத்து) அதில் பச்சை மிளகாய். தயிர். கொத்தமல்லித்தழை. சர்க்கரை.தோலுரித்த பாதாம் பருப்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து அதில் தேவையான அளவு உப்பு அரை டீஸ்பூன் சீரகத்தூள் கலந்து வைக்கவும் பாதாம் பூண்டு பச்சடி ரெடி. சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 2வாரம் வரை சாப்பிடலாம்.

பூண்டு தக்காளி சட்னி எப்படி செய்வது வாங்க

  வாணலியை அடுப்பில் வையுங்க. எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு காய்ந்ததும்.10 காய்ந்த மிளகாய்.2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு .பூண்டு 15 பல். தக்காளி-3 .உப்பு தேவையான அளவு  இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு தட்டில் ஆறவைக்கவும்.பிறகு  மிக்ஸி ஜாரில் நைஸாக அரைக்கவும் சூப்பரான பூண்டு தக்காளி சட்னி ரெடி

பூண்டு வெங்காயம் அரைத்து விட்ட கார குழம்பு

  கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விடுங்க.காய்ந்ததும் மிளகு சீரகம் தலா 2 ஸ்பூன். உளுத்தம்பருப்பு.துவரம் பருப்புதலா1டீஸ்பூன்.கறிவேப்பிலை ஒரு சிறிதளவு வெந்தயம் அரை டீஸ்பூன் மிளகாய் 5. இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைத்து.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக தண்ணீர் விடாமல் பவுடராக அரைக்கவும். சிறிதளவு புளி ஊற வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் 3 கரண்டி விட்டு எண்ணெய் காய்ந்ததும். கடுகு.வெந்தயம். சீரகம்தலா அரை டீஸ்பூன். கருவேப்பிலை சேர்த்து வதக்கவும அதனுடன் வெங்காயம் உரித்து சுத்தம் செய்து ஒரு கப்.பூண்டு 2 கப். தக்காளி2 நன்றாக கழுவி  நைஸாக அரிந்து. அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து ஒரு கப் எடுத்து அதில் சேர்த்து. சிறிதளவு உப்பு. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். சூப்பரான வெங்காயம் பூண்டு அரைத்துவிட்ட குழம்பு ரெடி. இட்லி. தோசை. சாதம். கோதுமை தோசை. ரவா தோசை. கல் தோசை இவை அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

கார்லிக் நாண்

  நாண்  செய்வது எப்படினு பார்க்கலாம்.2 கப்  மைதா  சிறிதளவு ஈஸ்ட் . இப்ப அரை ஸ்பூன் ஈஸ்ட் எடுத்து 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு மைதாமாவில் ஈஸ்ட் (கரைந்ததும்) தேவையானளவு தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவுப்போல் பிசைந்து.(சற்று தளர்வாக)அதன் மேல் எண்ணைத்தடவி 10 நிமிடம் ஊறவைக்கவும். இப்போது   தோசைக்கல் அடுப்பில் வைத்து கல் காயட்டும். அதற்குள் மாவுவை சப்பாத்திப்போல் தேய்த்து அதன்மேல் 2 பூண்டு நைசாக தூவி.சிறிது மல்லித்தழை தூவி  மறுபடியும் சப்பாத்திக்கட்டையால் தேய்த்து. தோசைக்கல்லில் போடவும்.அதில் 1ஸ்பூண்  வெண்ணைய் போட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து .ஒரு தட்டில் வைக்கவும். இப்ப கார்லிக் நாண் ரெடி. பட்டர் மட்டும் போட்டு செய்தால் அது பட்டர் நாண். அடுத்து பண்ணீர் பட்டர் மசாலா எப்படி செய்யனும் என பார்க்கலாம்.