https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...
வெண்டைக்காய் மண்டி
Withரசம்
தேவையானவை: துவரம் பருப்பு, நெய் - தலா 50 கிராம், மிளகு -15, கடுகு, சீரகம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை, நறுக்கிய கொத்துமல்லித் தழை - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் சிறிது நெய் விட்டு துவரம் பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு மெல்லிய துணியில் கொட்டி தளர்வாக முடிச்சுப் போடவும். மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து மற்றொரு துணியில் போட்டு தனர்வாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கொதிக்க விட்டு, முதலில் பருப்பு முடிச்சையும், சிறிது நேரம் கழித்து மற்றொரு முடிச்சையும் போடவும். பருப்பு நன்றாக வெந்ததும், எடுத்து முடிச்சை அவிழ்த்து, அதிலுள்ளவைகளை மிக்ஸியில் போட்டு வேகவைத்த பருப்பு நீர் சிறிது விட்டு அரைத்து... அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு நீரில் கொட்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து... நெய்யில் கடுகு, சீரகம் போட்டு தாளித்துக் கொட்டி கறிவேப்பிலை, கொ.ம.தழை போட்டு இறக்கி பரிமாறவும்
வெண்டைக்காய் மண்டி
தேவையானவை: நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, தட்டைப் பயறு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 150 கிராம், தக்காளி - 3, பச்சைமிளகாய் - 7, கத்தரிக்காய் 2,உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் - தலா 1, புளிக்கரைசல் 2 டீஸ்பூன், அரிசி களைந்த நீர் - 2 கப், கடுகு, உளுந்தம் பருப்பு தலா 1 டீஸ்பூன், வெந்தயம் - அரை ஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தட்டைப் பயிறை குக்கரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காயை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கிக் கொள்ளவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் வீட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கி, புளிக்கரைசல், அரிசி களைந்த தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய்கள் பாதி வெந்ததும் வதக்கிய வெண்டைக்காய், வேக வைத்த தட்டைப்பயறு சேர்த்து வேக விடவும். வெந்து கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக