முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

மொறுமொறுப்பான சுவையான மைசூர் பருப்பு ரெசிபி செய்வது எப்படி?

பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...

சளி, இருமலை விரட்டும் காரசாரமான மிளகு-சீரக புலாவ் & முட்டை புர்ஜி! அருமையான லஞ்ச் காம்போ!

 மிளகு-சீரக புலாவ்


 தேவையானவை: பாஸ்மதி அரிசிஒரு கப், பட்டாணி - 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை தலா ஒன்று, பச்சைமிளகாய் - 2, சீரகம் - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, இஞ்சி -பூண்டு விழுது, தயிர், நெய் - தலா ஒரு டீஸ்பூன், புதினா ஒரு ஆர்க்கு , எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்துமல்லித்தழை 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


 செய்முறை: முதலில் அரிசியைக் கழுவி நீரை வடித்து வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும். பின்னர் சீரகம், மிளகு சேர்த்து லேசாக பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும், பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, தயிர், பட்டாணி சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றவும். கலவையானது கொதித்து வரும்போது, அரிசியைச் சேர்த்து கிளறி விடவும். பின்னர் உப்பு, தழை சேர்த்து, குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்கவும்.

           

முட்டை புர்ஜி'

 தேவையானவை: பாஸ்மதி அரிசி ஒரு கப், முட்டை 4, வெங்காயம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் - தலா ஒன்று, பச்சைமிளகாய், கிராம்பு தலா 2, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், புதினா  நறுக்கிய கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், பட்டை ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி நீரை வடிக்கவும். வாணலியில்

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை  or veg யை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, உதிர் உதிராக வருமாறு கிளறி இறக்கினால், 'எக்  or  veg புர்ஜி' ரெடி! குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது, அரிசியைச் சேர்த்து நன்றாக வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரை மூடவும். 3 விசில் வந்ததும் இறக்கி, குக்கரை திறந்து, எக் புர்ஜி, கொத்துமல்லித்தழை சேர்த்து, ஃபோர்க்கால் நன்றாக கிளறிவிட்டு இறக்கவும். 

ஜீரணத்திற்கு உகந்த, மணம் மணக்கும் மிளகு-சீரக புலாவ் (Pepper Cumin Pulao) மற்றும் அதற்குத் தொட்டுக்கொள்ள முட்டை புர்ஜி (Bhurji) - இது ஒரு அட்டகாசமான மதிய உணவு காம்போ. மழைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த மிளகு-சீரக சாதம் உடலுக்கு இதமான ஆரோக்கியத்தைத் தரும். பேச்சுலர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் மிக எளிதாகச் செய்யக்கூடிய இந்த ரெசிபியை எளிய செய்முறை விளக்கங்களுடன் இந்தப் பதிவில் காணலாம். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...