சத்துக்கள் நிறைந்த புரோக்கோலி - பீட்ரூட் புலாவ்! குழந்தைகளுக்கான சூப்பர் ஹெல்தி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!
தேவையானவை: பாஸ்மதி அரிசி, தக்காளி ஜூஸ், உதிர்த்த புரோக்கோலி துண்டுகள் தலா ஒரு கப், கெட்டித்தயிர் அரை கப், பீட்ரூட் துருவல் - கால் கப், வெங்காயம் 2, கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன், நெய் சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, வதக்கிய பூண்டு 4 பல், தனியா - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, அடுப்புத் தணலில் நேரடியாக சுட்ட பெரிய வெங்காயம் - ஒன்று, தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி அரை அங்குலத் துண்டு. இவற்றை விழுதாக அரைக்கவும்.
புரோக்கோலி - பீட்ரூட் புலாவ் செய்முறை: அரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து நீரை வடிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு சூடானதும் ஊறவைத்த அரிசியை போட்டு| 3 நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பீட்ரூட் சேர்த்து வதக்கி, புரோக்கோலி துண்டுகள், உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, தக்காளி ஜூஸ், உப்பு, கரம் மசாலா, கெட்டித் தயிர் சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்னர் வறுத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கவும். சூடாக இருக்கும்போதே மேலாக சிறிதளவு நெய் ஊற்றி பரிமாறவும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த புரோக்கோலி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஆகியவற்றை இணைத்து ஒரு சுவையான புலாவ் செய்வது எப்படி? காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வண்ணமயமான புலாவ் மிகவும் பிடிக்கும். குறைந்த எண்ணெயில், அதிக சத்துக்களுடன் ஹோட்டல் சுவையில் இந்த புரோக்கோலி - பீட்ரூட் புலாவ் (Broccoli Beetroot Pulao) செய்யும் முறையை இந்தப் பதிவில் எளிய படங்களுடன் காணலாம். உங்கள் வீட்டு மதிய உணவை இன்று ஆரோக்கியமாக மாற்றுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக