பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
பைங்கன் மசாலா
கத்தரிக்காய் 250 கிராம்.கொண்டைக்கடலை 100 கிராம் தக்காளி - 3, வெங்காயம். காய்ந்த மிளகாய் தலா 4.பூண்டு 10 பல் தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன் தனியாஒரு மஞ்சந்தூள் சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு
மசாலா அரைக்க
தனியா காய்ந்த மிளகாய் தேங்காய்த்துருவல் மூன்றையும் ஒன்றாக வறுத்து பொடிக்கவும், கொண்டைக்கடலையை நன்றாக ஊறவைத்து வேகவைக்கவும் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் பூண்டு, நறுக்கிய கத்தரிக்காய் வேகவைந்த கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும். பின்னர் வறுத்து பொடித்த பொடி மஞ்சள்தூன், 2 ஸ்பூன் எண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.
முடக்கத்தான் ரசம்
தேவையானவை: முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி அளவு, ரசப்பொடி - ஒரு டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு, நெய் தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம் பருப்பை குழைய வேகவைத்து கரைத்துக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, நெய்யில் வதக்கிக் கொள்ளவும். புளியைக் கரைத்து அடுப்பில் வைத்து, உப்பு, ரசப்பொடி, வதக்கிய முடக்கத்தான் கீரையைச் சேர்க்கவும். பின்னர் துவரம் பருப்பு கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூளை தாளித்துக் கொட்டி இறக்கவும்.

கருத்துகள்
கருத்துரையிடுக