பருப்புத் துவையல் குறிப்பினைப் போலவே, மைசூர் பருப்பை வைத்து செய்யும் சுவையான மைசூர் பருப்பு சட்னி மைசூர் பருப்பு சட்னி இந்தச் சட்னி இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள்: மைசூர் பருப்பு - 1/2 கப் வரமிளகாய்- 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப) பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு- 3 பற்கள் புளி- சிறிய துண்டு உப்பு- தேவையான அளவு எண்ணெய்- 2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை. செய்முறை: 1. பருப்பை வறுக்கவும்: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மைசூர் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயாக வைத்து வறுத்துத் தனியாக எடுக்கவும். 2. மசாலா வதக்கவும்:அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு வரமிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக புளி சேர்த்து அடுப்பை அணைக்கவும். 3. அரைக்கவும்: வதக்கிய பொருட்கள் ஆறியவுடன், வறுத்த மைசூர் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். 4. தாளிப்பு...
லெமன் பாஸ்தா
தேவையானவை: மிக்ஸட் பாஸ்தா - 2 கப், பெரிய வெங்காயம், கேரட் - தலா 1,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், வெண்ணெய், சீஸ் - தலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன். - தலா கால் டீஸ்பூன்,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவைத்து, பாஸ்தாக்களை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும், அடுப்புத் தணலை குறைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, நீரை வடிகட்டி, ஆலிவ் ஆயில் சேர்த்துக் குலுக்கி ஆறவிடவும். பானில் வெண்ணெய், சீஸை சேர்க்கவும். இரண்டும் உருகும்போது சர்க்கரை, உப்பைச் சேர்க்கவும். அதில், நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி, வெந்த பாஸ்தாக்களை சேர்த்து நன்றாக கலந்து விடவும். பின்னர், மல்லித்தழை, மிளகுத்தூள் தூவி, சூடாக பரிமாறவும்.
சன்னா வடை
தேவையானவை: வெள்ளைக் கொண்டைக்கடலை - 2 கப், மைதா - 2 டேபிள்
ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - கால் கப் வெள்ளை எள் 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், - மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், பூண்டு பற்கள் - 5, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையைக் கழுவி, 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் நீரை வடித்து, மிக்ஸியில் போடவும். அதனுடன் மைதா, நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, சீரகம், மிளகு, உரித்த பூண்டு, மிளகாய்த்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இந்தக் கலவையை சிறிய வடைகளாகத் தட்டி, வெள்ளை எள்ளில் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமாக பொரித்து எடுத்து, மயோனைஸ் சாஸுடன் சூடாக பரிமாறவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக