ஹோட்டல் சுவையில் வித்தியாசமான மதிய உணவு! சத்தான புரோக்கோலி புலாவ் மற்றும் சுவையான லெமன்-வெஜ் இடியாப்பம் செய்வது எப்படி?
புரக்கோலி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புரக்கோலி, வெங்காயம், பச்சைமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு தலா ஒரு டீஸ்பூன், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு - தலா ஒன்று, எண்ணெய், உப்பு தேவைக்கேற்ப
செய்முறை: புரக்கோலியை நறுக்கி, சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். மிதமான வெந்நீரில், சிறிதளவு உப்பு சேர்த்து, சுத்தப்படுத்திய புரக்கோலியைப் போடவும். சிறிது நேரம் கழித்து, தண்ணீரை வடித்து விடவும். பாசுமதி அரிசியைக் கழுவி, 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் இஞ்சி-புண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய பச் ைளகாம், புரக்கோலி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, உப்பு, ஒன்றே கால் ரல் டுண்ணி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும்,
அரிசியைச் சேர்த்து, குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்குவு வந்தகம். அரிசி ஆனதும், குக்கரை திறந்து, வும். பாலக் ைசேர்த்து, கரண்டியின் பின் பக்கத்தவும், ஸ்டீம்.
உடையாதவாறு மெதுவாகக் கிளறி விடவும். பாலக் ரைத்தா வுடன் பரிமாறவும்.
லெமன்-வெஜ் இடியாப்பம்
தேவையானவை: வேகவைத்து உதிர்த்த இடியாப்பம் - 2 கப், நறுக்கிய காய்கறி கலவை
ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, நறுக்கிய கொத்துமல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, வெள்ளை முழு உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சைமிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறி கலவை, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்புத் தணலைக் குறைத்து வைத்து, காய்கறி நன்றாக வேகும் வரை அவ்வப்போதுக் கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்து, இடியாப்பம், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய கொத்துமல்லித்தழைத் தூவி இறக்கவும். கத்தரிக்காய் சட்னியுடன் பரிமாறவும்.


கருத்துகள்
கருத்துரையிடுக