முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

வன்காய. கசகசால கூற&தொண்டக்காய வெயுடு & அல்லம் பச்சடி & பச்சி புலுசு &பீரக்காய தொக்கு பச்சடி

 வன்காய. கசகசால கூற


தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் -கால் கிலோ, கசகசா -2 டீஸ்பூன், தனியா -ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், வெல்லம் -தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்.


செய்முறை: 

சிறிதளவு தண்ணீரில்புளியை அரை மணி நேரம் ஊற வைத்து, புளித்தண்ணீர் தயார் செய்து வைக்கவும். தனியாவை வெறும் வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும். கசகசாவை சற்றே நிறம் மாறும் வரை வறுத்துக்கொள்ளவும். வறுத்த தனியா, கசகசாவை ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மையாக அரைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கி,


சிறிதளவு எண்ணெய் ஊற்றிய காணவி போட்டு, சற்றே பொன்னிறமாகும் வதக்கி தனியே வைக்கவும், வான எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகை பே பொரியவிட்டு, சீரகத்தைச் சேர்த்து பொரி விடவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழக சேர்த்து, பச்சை வாசனை போரும் வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் கசகசா விழுதைச் சேர்த்து, 2 நிமிடம் பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து வாசனை போகும் வரை கொதிக்கம் பின்னர் வெல்லம், சிறிதளவு உப்பு, கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் கொதிக்கும்போது, வதக்கிய சுத்தரிக்க துண்டுகளைச் சேர்க்கவும். அடுப்பை பி தீயில் வைத்து, காய் நன்றாக வெந்து பதம் வரும் வரை கொதிக்கவைத்துஇறக்க சூடான சாதம், புலாவ், சப்பாத்தி ரொட்டியுடன் பரிமாறவும்.


தொண்டக்காய வெபுடு


தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, எண்ணெய், உப்பு - தேவைக்கு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்.


வறுத்து அரைக்க: வரமிளகாய் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை 2 டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, தனியா ஒரு டீஸ்பூன்.


செய்முறை: 

 வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில் வறுத்து,சிறிதளவு உப்பு சேர்த்து சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். கோவைக்காயையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகைப் போட்டு பொரிய விடவும். பின்னர் உளுந்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சற்றே பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய கோவைக்காய், மஞ்சள்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, காய் நன்றாக வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும். பின்னர் வறுத்து அரைத்தப் பொடியைத் தூவி, 10 நிமிடம் வரை நன்றாக வதக்கி இறக்கவும். சூடான சாதம் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.

அல்லம் பச்சடி


தேவையானவை: இஞ்சி - 2 இன்ச், எண்ணெய் - தேவைக்கு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெல்லம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு வரமிளகாய் - 5, வெந்தயம் - கால் டீஸ்பூன்.


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து, பெருங்காமம் ஒரு சிட்டிகை.


செய்முறை: இஞ்சியை சிறியத் துண்டுகளாக நறுக்கவும். வரணலியில் எண்ணெய்


ஊற்றி, காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், வெந்தயம் சேர்த்து, பருப்புகள் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் இஞ்சி, புளியைச் சேர்த்து, இஞ்சி பொன்னிறமாகி, சற்றே சுருங்கும் வரை வதக்கி அனைத்தையும் மிக்ஸியில் போடவும். பின்னர் அவற்றுடன் வெல்லம், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி, பச்சடியில் கொட்டிபரிமாறவும் 


பச்சி புலுசு


தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, பச்சைமிளகாய் - 5, கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்துமல்லித்தழை வெல்லம் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - ஒரு கப். ஒரு டீஸ்பூன்,


தாளிக்க: கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன்.


செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, புளித்தண்ணீர் தயார் செய்யவும். அந்த புளித்தண்ணீரில் வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி, நசுக்கி, புளித்தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். பின்னர் கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழையை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகை தாளித்துக் கொட்டவும். அரை மணி நேரம் கழித்து, இட்லி, பருப்பு சாதம், வெண் பொங்கல் என இவற்றில் ஏதாவது ஒரு உணவுடன் 'பச்சி புலுசு'வை பரிமாறலாம்


பீரக்காய தொக்கு பச்சடி


தேவையானவை: பீர்க்கங்காய் ஒன்று, சீரகம்


அரை டீஸ்பூன், பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 3, தக்காளி - ஒன்று, வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.


தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உளுந்து - ஒரு டீஸ்பூன், வரமிளகாய் - ஒன்று, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - ஒரு கொத்து.


செய்முறை: பீர்க்கங்காயின் தோலை சீவவும். சற்றே தடிமனான தோலை நீக்கி விடவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, பீர்க்கங்காயின் தோலை சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து ஆறவைக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு பொரிந்ததும், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி மிக்ஸியில் போடவும். அதனுடன் உப்பு, வறுத்த வேர்க்கடலை, ஆறவைத்த பீர்க்கைத்தோல் கலவை, தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். காய்ந்த எண்ணெயில் கடுகை தாளித்து, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமானதும், பச்சடியில் கொட்டி, சூடாகப் பரிமாறவும்..

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...