முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

இன்ஸ்டன்ட் பேடா&கலாகண்ட்&ஆரோரூட் அல்வா&பேரீச்சை - வேர்க்கடலை லட்டு&கோவா பர்பி&வெள்ளரி விதை பர்பி&கராச்சி அல்வா

 இன்ஸ்டன்ட் பேடா


தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 3/4 டின், பால்பவுடர் - 1 கப், பிஸ்தா - 10, உருக்கிய நெய் - 3 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்.


செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் கன்டென்ஸ்டு


மில்க், பால்பவுடர் சேர்த்து கலந்து, அடுப்பை ஆன்செய்து, கலக்கவும். சற்றே கெட்டியானதும், 3 டீஸ்பூன் நெய்ச் சேர்க்கவும். கடாயில் ஒட்டாமல், உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். சற்றே ஆறியதும், கையில் நெய்த் தடவி, எலுமிச்சை அளவு மாவை எடுத்து தட்டவும். நடுவில் சிறிய பள்ளம் செய்து, அதற்கு மேல் பிஸ்தாவை வைத்து, அழுத்தவும்.


ஒரு மணிநேரம் கழித்து, சற்றே ஈரப்பதம் குறைந்தவுடன், காற்றுப் புகாத கன்டெய்னரில் அடைக்கவும்.


 கலாகண்ட்


தேவையானவை: கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின், பனீர் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன், பிஸ்தா - 8, நெய் 1 டீஸ்பூன்.


செய்முறை: பனீரை துருவவும். அடிகனமான பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், பனீர் துருவலை கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். மிதமான தீயில் வைத்து, அல்வா பதம் வரும்வரை கலக்கவும். சற்றே கெட்டியாகி, கடாயில் ஒட்டாமல் வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமன்செய்யவும். வெதுவெதுப்பாக இருக்கும்போது, வில்லைகள் போட்டு, ஒவ்வொரு துண்டின்மீதும் பிஸ்தாவை வைக்கவும்.


குறிப்பு: 2-3 குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் 20 நிமிடங்கள் ஊறவைத்து, கன்டென்ஸ்டு மில்க்குடன் சேர்த்தும் செய்யலாம்.


ஆரோரூட் அல்வா


தேவையானவை: ஆரோரூட் மாவு, சர்க்கரை


தலா 1 கப், தண்ணீர் 3 கப், நெய் - 3 டீஸ்பூன்.


செய்முறை: அடிகனமான பாத்திரத்தில், ஆரோரூட் மாவு,சர்க்கரை, தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். மிதமான தீயில்வைத்து, கிளறவும். முதலில் மாவு சற்று கெட்டியாகும். பின்னர், கண்ணாடிப் பதம் வந்து, கடாயில் ஒட்டாமல், அல்வா பதம் வரும். இப்போது 2 டீஸ்பூன் நெய்யைக் கலக்கவும். பின்னர், நெய்த் தடவிய தட்டில் ஊற்றி, பரப்பவும். சற்றே வெதுவெதுப்பாக இருக்கும்போது, விரும்பிய அளவில் வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.


குறிப்பு: 3 கப் தண்ணீருக்குப் பதிலாக, 1 1/2 கப் தண்ணீரும், 1 1/2 கப் பாலும் சேர்த்து செய்தால், அல்வா மிகவும் ருசியாக இருக்கும்.


பேரீச்சை - வேர்க்கடலை லட்டு


தேவையானவை: வறுத்த வேர்க்கடலை1 கப்,


பேரீச்சம்பழம் - 15.


செய்முறை: வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கவும். பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கவும். தோல்நீக்கிய வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர், விதைநீக்கிய பேரீச்சையைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும். எலுமிச்சையளவு உருண்டைகளாகப் பிடிக்கவும்.


குறிப்பு: காய்ந்தத் தேங்காய்த்துருவலை ஒரு தட்டில் கொட்டி, டேட்ஸ் உருண்டைகளைப் போட்டு, புரட்டியெடுத்தும் பரிமாறலாம்.


கோவா பர்பி


தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - 200 கிராம், சர்க்கரை - 1/4 கப் + 2 டீஸ்பூன், பாதாம் - 10 (நீளவாக்கில் நறுக்கியது), நெய் - 2 டீஸ்பூன்.


செய்முறை: சர்க்கரை சேர்க்காத கோவாவை கையால் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கோவா, சர்க்கரைச் சேர்த்துக் கலந்து, மிதமான தீயில்வைத்து கிளறவும். சர்க்கரை உருகி, கோவா மென்மையாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய்த் தடவிய தட்டில் கொட்டவும். பின்னர், பாதாமைத் தூவி, சற்றே மிதமான சூடு இருக்கும்போது, வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.


குறிப்பு: தேவைப்பட்டால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்


வெள்ளரி விதை பர்பி


தேவையானவை: வெள்ளரி விதை, சர்க்கரை - தலா 1 கப், தண்ணீர் - 1/2 கப், நெய் - 1/4 கப்.


செய்முறை: வெள்ளரி விதையை மிக்ஸியில்


பொடிக்கவும். ஒரு தட்டில் நெய்த் தடவிவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், சர்க்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில்வைத்து, ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும். பின்னர் வெள்ளரி விதைப் பொடியைத் தூவி, கட்டித்தட்டாதவாறு கைவிடாமல் கலக்கவும். கலவை சற்றே கெட்டியானதும், சிறிது சிறிதாக நெய்ச் சேர்த்து, கைவிடாமல் கிளறவும். பர்பி கலவை நுரைத்து வரும்போது, உடனடியாக ஒரு தட்டில் கொட்டி, சமன்செய்யவும். சற்றே வெதுவெதுப்பாக இருக்கும்போதே, வில்லைகள் செய்ய, கத்தியால் கோடுகள் போட்டுக்கொள்ளவும். ஆறியதும், வில்லைகளாக்கிப் பரிமாறவும்.


 கராச்சி அல்வா


தேவையானவை: கார்ன் மாவு - 1/2 கப், நெய் - 2 டீஸ்பூன், சர்க்கரை 1 1/2 கப், தண்ணீர் 2 1/2 கப், முந்திரி - 10, பாதாம் - 6, ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, ஃபுட்கலர் - 2 சிட்டிகை."


செய்முறை: முந்திரி, பாதாமை நீளவாக்கில்


நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கார்ன் மாவு, தண்ணீர், ஃபுட்கலர் சேர்த்து, கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கலந்து, அடுப்பை ஆன்செய்யவும். சர்க்கரைக் கரைந்ததும், கார்ன் மாவு கலவையைச் சேர்த்து, மிதமான தீயில்வைக்கவும். கண்ணாடிப் பதம் வந்ததும், நெய், நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து, கலந்துவிடவும். கடாயில் ஒட்டாமல், லேசாகக் கெட்டியாகி, அல்வா பதம் வந்ததும், நெய்த் தடவிய தட்டில் கொட்டி, சமன்செய்யவும். சற்றே சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். ஆறியதும் பரிமாறவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...