முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

வாழைப்பூ மஞ்சூரியன்.வாழைக்காய் சைவ கருவாட்டு பொரியல் . &வாழைப்பூ சைவ மீன் குழம்பு.வாழைப்பூ உருண்டைக் குழம்பு.வாழைக்காய்-குடைமிளகாய் கடாய் சப்ஜீ & நேந்திரம் - ஓட்ஸ் சூப்.வாழைப்பூ உருண்டைக் குழம்பு

 வாழைப்பூ மஞ்சூரியன்


உருண்டை செய்ய வாழைப்பூ முட்டைக்கோஸ், வெங்காயம் - தலா கிராம், குடைமிளகாய், வெங்காயத்தாள் நலா 50 கிராம். இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, சோள மாவு - தலா 2 உஸ்பூன், மைதா மாவு - ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு மிளகுத்தூள், சோயா சாஸ் -தவா ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, காய்ந்த எண்ணெய்பில் போட்டு பொரித்து எடுக்கவும்.


கிரேவி செய்ய பூண்டு 4 பற்கள், இஞ்சி - சிறிதளவு, பச்சைமிளகாய், வெங்காயம் - தலா ஒன்று, சிறிதளவு (இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்), சோயா 100 சாஸ், கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ், -மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவைக்கு.


கிரேவி செய்முறை: வாணலியில்


எண்ணெய்யை சூடாக்கி, நறுக்கி நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், அனைத்தையும் நன்றாக வதக்கி, சாஸ் வகைகள், மிளகுத்தூள் சேர்க்கவும். பின்னர் சிறிதளவு சோள மாவை தண்ணீரில் கரைத்து, 2 எஸ்பூன் ஊற்றவும். பின்னர் மஞ் சூரியன் உருண்டைகளை போட்டு, தறுக்கிய வெங்காயத்தாளை தூவி இறக்கவும்.


குறிப்பு: ஃபிரைடு ரைஸ் / சப்பாத்தியுடன் இதை பரிமாறலாம்.


வாழைக்காய் சைவ கருவாட்டு பொரியல்


தேவையானவை: வாழைக்காய் - 2, கறிவேப்பிலை -ஒரு கைப்பிடியளவு, உரித்த பூண்டு - 8 பற்கள், சோம்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்த்துருவல் - 50 கிராம்.


செய்முறை: கறிவேப்பிலை, பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய்,


தேங்காய்த்துருவல் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, 'இட்லிப் பொடி பக்குவத்தில் (தண்ணீர் சேர்க்காமல்) அரைத்து எடுக்கவும். வாழைக்காயின் தோலை நீக்கி, நீளமாக நறுக்கி, காய்ந்த எண்ணெயில் போட்டு, அரை வேக்காடாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் வறுத்து வைத்துள்ள வாழைக்காய், அரைத்துவைத்துள்ள பொடியை சேர்த்து, நன்றாகக் கிளறி இறக்கவும்.


குறிப்பு: இதை ரசம் சாதம் / சாம்பார் சாதத்துடன் தொட்டுக்கொள்ளலாம்


வாழைப்பூ சைவ மீன் குழம்பு


தேவையானவை: வாழைப்பூ பஜ்ஜி - 20 கிராம், உரித்த சின்ன வெங்காயம் -10, உரித்த பூண்டு - 10 பற்கள், தக்காளி - 2, மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், தனியாத்தூள் 4 டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, தேங்காய் விழுது - 4 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை - சிறிதளவு.


செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோம்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சாம்பார் பொடி சேர்த்து, ஒரு கொதி வரும் வரை காத்திருக்கவும். பின்னர் புளித்தண்ணீர், தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன்பாக வாழைப்பூ பஜ்ஜியை பொரித்து, குழம்புடன் சேர்த்து, கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.


வாழைப்பூ பஜ்ஜி 


வாழைப்பூ பஜ்ஜி செய்ய: வாழைப்பூ - 100 கிராம், கடலை மாவு - 50 கிராம், அரிசி மாவு - 15 கிராம், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன். இவற்றை ஒன்றாக சேர்த்து, நன்றாகப் பிசறி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்."


வாழைப்பூ உருண்டைக் குழம்பு


தேவையானவை: ஆய்ந்து சுத்தம் செய்து


பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 150 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு -75 கிராம், சோம்பு, சீரகம் - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 10, உரித்த பூண்டு - 15 பற்கள், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, புளி - எலுமிச்சை அளவு, தேங்காய்த்துருவல் 5 டீஸ்பூன், கொத்துமல்லித்தழை சிறிதளவு.


செய்முறை: துவரம் பருப்பு,


கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய

வெங்காயம், பூண்டு, கொத்துமல்லித்தழை சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் பரப்பி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி,சோம்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்ட  தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீர், உப்பு, வெந்த பருப்பு உருண்டைகளை சேர்க்கவும். இரண்டு கொதிகள் வந்ததும், தேங்காய்த்துருவலை விழுதாக்கிச் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்துமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.


குறிப்பு: குழம்பு நன்றாக கொதித்தப் பிறகே உருண்டைகளை போடவும்.


வாழைக்காய்-குடைமிளகாய் கடாய் சப்ஜி


தேவையானவை: வாழைக்காய், குடைமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, கேரட் தலா ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவைக்கு. வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 3, தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உரித்த பூண்டு - 4 பற்கள், பச்சைமிளகாய் ஒன்று, இஞ்சி - சிறிதளவு, தேங்காய்த்துருவல் - 4 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10.


செய்முறை: வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் வாணலியில்


ஒவ்வொன்றாகப் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, வாசனை வரும் வரை வறுத்து, ஆறவைத்து, மிக்ஸியில் விழுதாக்கவும். அதே வாணலியில் மறுபடியும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, வாழைக்காய், கேரட் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் அனைத்தும் பாதியளவு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள விழுது, நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.


குறிப்பு: நாண், சப்பாத்தி, பூரி, தயிர் சாதத்திற்கு நல்ல சைட்-டிஷ் இது.)


நேந்திரம் - ஓட்ஸ் சூப்


தேவையானவை: நேந்திரம் பழம் - அரை பழம், ஓட்ஸ் - 100 கிராம், பால்


100 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு 4 பற்கள் (பொடியாக நறுக்க), சில்லி ஃபிளேக்ஸ் - 5 கிராம், எலுமிச்சைச்சாறு 2 டீஸ்பூன், வேகவைத்த சோளம் - 50 கிராம், கொத்துமல்லித்தழை, உப்பு சிறிதளவு.


செய்முறை: நேந்திரம் பழத்தை அரைக்கவும். வாணலியில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய பூண்டு, வேகவைத்த சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பால், ஓட்ஸ், உப்பு சேர்த்து, பாதியளவு வெந்ததும், அரைத்த நேந்திரம் விழுது, மிளகுத்தூள் சேர்த்து இரண்டு கொதி வரும் வரை காத்திருக்கவும். பின்னர் எலுமிச்சைச்சாறு, சில்லி ஃபிளேக்ஸ், கொத்துமல்லித்தழையைத் காவி இறக்கவும்.


குறிப்பு: இந்த சூப்பை காலையில் பிரேக் ஃபாஸ்ட்டாக சாப்பிட்டு விட்டு, ஒரு ஆப்பிள் / வாழைப்பழத்தை சாப்பிட்டால், நல்ல எனர்ஜி கிடைக்கும் ! )


வாழைப்பூ உருண்டைக் குழம்பு


தேவையானவை: ஆய்ந்து சுத்தம்


பொடியாக நறுக்கிய வாழைப்பூ - 150 துவரம் பருப்பு - 100 கிராம், கடலைப்பரு 75 கிராம், சோம்பு, சீரகம் - தலா 4 டீஸ் காய்ந்த மிளகாய் - 5, சின்ன வெங்காயம் உரித்த பூண்டு - 15 பற்கள், மிளகாய்த் - 4 டீஸ்பூன், தனியாத்தூள் 3 டீஸ் பெரிய வெங்காயம் - ஒன்று, தக்காளி புளி - எலுமிச்சை அளவு, தேங்காய்த்துரு - 5 டீஸ்பூன், கொத்துமல்லித்தரை சிறிதளவு.

செய்முறை: துவரம் பருப்பு. கடலைப்பருப்பு இரண்டையும் தனித்தனி ஒரு மணி நேரம் ஊறவைத்து, சோ சீரகம், காய்ந்த மிளகாய், மஞ்சள் உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த விழுது பொடியாக

நறுக்கிய வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், பூண்டு, கொத்துமல்லித்தழை சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் பரப்பி, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி,சோம்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும், புளித்தண்ணீர், உப்பு, வெந்த பருப்பு உருண்டைகளை சேர்க்கவும். இரண்டு கொதிகள் வந்ததும், தேங்காய்த்துருவலை விழுதாக்கிச் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்துமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.


குறிப்பு: குழம்பு நன்றாக கொதித்தப்தூவி இறக்கவும்.


குறிப்பு: குழம்பு நன்றாக கொதித்தப் பிறகே உருண்டைகளை போடவும்.

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...