முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

www.kalaireal360.xyz

Engineering & CAD Design Services in Chennai | The CAD Company

https://thecadcompanyservices.blogspot.com/2026/08/world-class-engineering-cad-design.html Transform Your Ideas into Precision Engineering Realities with The CAD Company From concept to completion, The CAD Company is a leading Chennai-based engineering and architectural design firm. We deliver high-precision CAD solutions, 3D modeling, product development, and architectural design services tailored for industries worldwide—including Mechanical, Automotive, Aerospace, and Construction. Why Choose The CAD Company? • Engineering-First Mindset: Deep technical analysis to build real-world, functional designs. • Detail-Oriented Execution: High-precision 2D drafting and 3D modeling meeting international standards. • Global Strategic Partner: Seamless integration with your project team and tight delivery schedules. Our Core Services • 01. Design Support Services: Concept sketches, detailed 2D drafting, 3D modeling, and manufacturing assembly drawings. • 02. Reverse Engineeri...

10 Uniquely Tasty Veg Recipes in Tamil – Sweet, Snack & Fusion Delights

 H1: 10 Special Vegetarian Recipes – Tamil Fusion Dishes


H2: 1. பைனாப்பிள் பொங்கல் (Pineapple Pongal)

• இனிப்பாகவும், பழ சுவையோடும்.

• சாஃப்ரான் மற்றும் நெய் ருசி கலந்த சுவை.

H2: 2. ஆலு பான்கேக் (Aloo Pancake)

• உருளைக்கிழங்கை வைத்து சத்தான ஸ்நாக்.

• சிறிய குழந்தைகளுக்கேற்றது.

H2: 3. ஸ்வீட் கார்ன் மிக்ஸ் (Sweet Corn Mix)

• வேக வைத்த கார்னுடன் மசாலா பிளேவர்.

• சுருட்டு செய்து லஞ்ச் பாக்ஸுக்கு பரிபூரணமாக.

H2: 4. இஞ்சி முரப்பா (Ginger Murabba)

• பச்சை இஞ்சியின் இனிப்பு பாகம்.

• ஜீரணத்திற்கு சிறந்தது.

H2: 5. ஸ்வீட் பொட்டேடோ ஃபிங்கர் சிப்ஸ் (Sweet Potato Finger Chips)

• கேஷ்யூ எண்ணையில் பொரித்த ஆரோக்கிய snacks.

• குழந்தைகளுக்குப் பிடித்தது.

H2: 6. கோபி ஸ்வீட் லாலிபாப் (Gobi Sweet Lollipop)

• காப்சிகம், கோபி, சாஸ் கலவையுடன் செய்கை.

• Party starter-ஆக சிறந்த தேர்வு.

H2: 7. பறங்கிக்காய் அல்வா (Pumpkin Halwa)

• பசுமை பறங்கிக்காயில் நெய், பால் மற்றும் சர்க்கரை கலந்த இனிப்பு.

• தீபாவளிக்கு சிறந்தது.

H2: 8. அங்கூரி பேடா (Angoori Peda)

• சிறிய உருண்டைகளில் சிக்கனமான condensed milk சுவை.

• North Indian touch.

H2: 9. கேரட் ஸ்டஃப்டு குல்சா (Carrot Stuffed Kulcha)

• பஞ்சாபி ஸ்டைல் flatbread with carrot filling.

• தயிர் அல்லது சட்னியுடன் பரிமாறலாம்.

H2: 10. செவ்வாழை புட்டிங் (Red Banana Pudding)

• செம்மணல் வாழைப்பழத்தில் சாக்லேட், பால் மற்றும் நெய்.

• சிறார்களுக்கு மிகவும் பிடிக்கும் .



பைனாப்பிள் பொங்கல்

தேவையானவை:

பைனாப்பிள் கால் பாகம், பச்சரிசி -1 கப்,

பாசிப்பருப்பு - அரை கப், பால் - 1கப், சர்க்கரை - கால் கப் + 1 டேபிள் ஸ்பூன்,முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ்

சில துளிகள், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஃபுட் கலர் (மஞ்சள் நிறம்) - சிறிதளவு,


செய்முறை: பைனாப்பிள் தோலை நீக்கி, ஒரு இன்ச் சதுரத் துண்டுகளாக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பச்சரிசி, பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து, சர்க்கரை, பால் ஊற்றிக் குழைத்து, வெந்த பைனாப்பிளை சேர்க்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு, ஃபுட் கலர், எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு பரிமாறவும்.


ஆலு பான்கேக்

தேவையானவை:

உருளைக்கிழங்கு - 2, ஆல் பர்ப்பஸ் மாவு / மைதா 1 கப், பால் - 1 கப், சர்க்கரை -கால் கப், வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை, ஆலிவ் ஆயில் - சிறிதளவு.


செய்முறை: உருளைக்கிழங்கின் தோலை சீவி, நைசாகத் துருவவும்.


வெண்ணெய், பேக்கிங் பவுடர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும். இதில், துருவிய உருளை, மைதா, பாலை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும் (அதிகம் அடிக்க வேண்டாம்). நான்ஸ்டிக் தவாவில் ஆலிவ் ஆயிலை ஸ்ப்ரே செய்து, ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றி, லேசாக ஊத்தப்பம் போல் தடவவும். 2 நிமிடங்கள் கழித்து, திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். தேன் / ஜாம் / வெண்ணெயுடன் பரிமாறவும்.


 ஸ்வீட் கார்ன் மிக்ஸ்


தேவையானவை:

வேகவைத்த ஸ்வீட் கார்ன் - 2 கப், பொடியாக

நறுக்கிய வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - 1 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கேரட் - 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், கருப்பட்டிப் பாகு - 2 டீஸ்பூன், பேரீச்சை ஜாம் - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு - கால் டீஸ்பூன்.


செய்முறை: மேற்காணும் அனைத்து பொருள்களையும் அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். இதை அப்படியே பரிமாறலாம். இல்லாவிட்டால், மேலாக ஓமப்பொடி பொரி சேர்த்தும் பரிமாறலாம்.


 இஞ்சி முரப்பா 

தேவையானவை:

தோல் நீக்கி துருவிய

இஞ்சி - 1 கப், 

பால் -1 கப்,

சர்க்கரை - 1 கப், நெய் -


தேவையான அளவு.


செய்முறை: இஞ்சித்துருவலை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து மைய


அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய்த் தடவிய ட்ரேயில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள் போடவும். சூடு நன்றாக ஆறியதும், காற்றுப் புகாத டப்பாவில் அடைக்கவும். தேவையானபோது எடுத்து உபயோகிக்கவும்.


 சுவீட் பொட்டேடோ ஃபிங்கர் சிப்ஸ்


தேவையானவை:


சர்க்கரைவள்ளிக் கிழங்கு கால் கிலோ, சர்க்கரை - 1 கப்,

ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை, முந்திரி, கிஸ்மிஸ்

தலா 2, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை: சர்க்கரைவள்ளிக் கிழங்கின் தோலை உரித்து, குச்சிகளை போல நீளநீளமாக சீவி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். முந்திரி, கிஸ்மிஸை நெய்யில் பொன்னிறமாக வறுத்து, பொரித்த சிப்ஸில் சேர்க்கவும். சர்க்கரையில் 'முத்துப் பாகு' காய்ச்சி, அதில் ஃபிங்கர் சிப்ஸைப் போட்டு நன்றாகப் புரட்டி வைக்கவும். சர்க்கரைக்குப் பதிலாக வெல்லமும் பயன்படுத்தலாம்.


 கோபி ஸ்வீட் லாலிபாப் 

தேவையானவை:

காலிஃப்ளவர் துண்டுகள்


15, மைதா மாவு

கால் கப்,

சோளமாவு கால் கப், 

பனீர் துருவல் - 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: காலிஃப்ளவர் பூக்களை வெந்நீரில் போட்டு, மூன்று நிமிடங்கள் வேகவைத்து எடுத்து, வடிகட்டி வைக்கவும். நைசாக துருவிய பனீருடன் சோளமாவு, மைதா மாவு, சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும். இந்தக் கரைசலில் காலிஃப்ளவர் பூக்களை தோய்த்து, நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்.


 பறங்கிக்காய் அல்வா


தேவையானவை:


பறங்கிக்காய் - 2 கீற்று,

சர்க்கரை - 1 கப், நெய் - 2

டேபிள் ஸ்பூன், கெட்டியான பால் - 1கப், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 8, ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்.


செய்முறை: பறங்கிக்காயின் தோலை சீவி, மென்மையாகத் துருவவும். பாதி நெய்யில் முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். மீதமுள்ள நெய்யில் பறங்கிக்காய்த் துருவலைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் இதில் பாலை ஊற்றி வேகவிடவும். கலவை நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும். இறுகியதும், வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி, பரிமாறவும்.


அங்கூரி பேடா


தேவையானவை:


பூசணிக்காய் - 2 கீற்று,


சுண்ணாம்பு - 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் 3, தாழம்பூ எசன்ஸ் - சில துளிகள், குங்குமப்பூ 1 சிட்டிகை, கேசரி கலர் - ஒரு சிட்டிகை.


செய்முறை பூசணியின் தோலை சீவி, ஒரு இன்ச் சதுரத் துண்டுகளாக்கவும்.


3 கப் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் பூசணித்துண்டுகளை 24 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாக அலசி, கழுவி எடுத்து, தண்ணீரில் போட்டு 1 நிமிடம் வேகவைத்து வடிக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, கேசரி கலர், கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்ததும், பூசணித்துண்டுகளைச் சேர்த்து, நீர் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கவும். தாழம்பூ எசன்ஸை ஸ்பிரே செய்து, ஆறியதும் பரிமாறவும்.


 பழம்பொரி 

நேந்திரன் வாழைப்பழம் -2,

மைதா -அரை கப், பச்சரிசி மாவு

- 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, பேக்கிங் சோடா - 1 சிட்டிகை, எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு.


செய்முறை: நேந்திரன் வாழைப்பழத்தின் தோலை நீக்கி, பஜ்ஜிக்கு சீவுவது போல சீவிக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, சர்க்கரை ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 'பஜ்ஜி மாவு' பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, நேந்திரன் ஸ்லைஸுகளை மாவில் தோய்த்துப் போட்டு, பொரித்தெடுக்கவும்.


கேரட் ஸ்டஃப்டு குல்சா


தேவையானவை:


கேரட் கால் கிலோ, மைதா 2 கப், சர்க்கரை கால் கப், உப்பு அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன், ஈஸ்ட் - சிறிதளவு.


செய்முறை: கேரட்டின் தோலை சீவி, துருவி, ஒரு பானில் போட்டு,


பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து வேகவைத்து, 'பூரணம்' போல கிளறி எடுக்கவும். சற்றே வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்டை ஊறவைத்து, மைதா மாவு, உப்புக் கலவையில் ஊற்றி, மென்மையாகப் பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் (மூடி போட்டு வெயிலிலும் வைக்கலாம்). இதில் எலுமிச்சை அளவு உருண்டையை எடுத்து, கேரட் பூரணத்தை வைத்து மூடி, கனமான சப்பாத்திகளாகத் திரட்டி, நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.


செவ்வாழை புட்டிங்

தேவையானவை:


செவ்வாழைப்பழம் 2,


தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தேன் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.


செய்முறை: செவ்வாழைப்பழத்தின் தோலை உரித்து, வட்ட வடிவ ஸ்லைஸுகளாக நறுக்கி, ஒரு கிண்ணத்தில் வட்ட வடிவில் அடுக்கவும்.


அதன் மீது தேங்காய்த்துருவலைத் தூவி, தேன் ஊற்றவும். இறுதியாக ஏலக்காய்த்தூளை தூவிப் பரிமாறவும்.


குறிப்பு: இந்தப் புட்டிங்கை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்!

கருத்துகள்

www.kalaireal360.xyz

ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே 4 வகை புலாவ் ரெசிபிகள்! கத்தரிக்காய், தக்காளி, ஜீரா மற்றும் காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி?"

 கத்தரிக்காய் புலாவ் தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 1/4 கிலோ, பட்டை,லவங்கம் தலா 2, முழு மிளகு - 2 டீஸ்பூன், தேங்காய் / மூடி, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை- தாளிக்க, பாஸ்மதி அரிசி 1/4 கி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு கறிவேப்பிலை, மிளகு பச்சை மிளகாய், தேங்காய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி நன்கு அரைக்கவும். எண்ணெயில் வெங்காயத்தை வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கிய கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும் கலவை நன்கு கொதித்து, கெட்டியானதும் இறக்கி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.    தக்காளி புலாவ் தேவையான பொருட்கள்: தக்காளி -5, சின்ன வெங்காயம்-200 கி, மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன், பட்டை, லவங்கம்-தலா2, இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை-சிறிதளவு, எலுமிச்சை-பாதி மூடி, பாஸ்மதி அரிசி-21% கப், எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவையான அளவு. செய்முறை: ...

காலிஃப்ளவர் &மன்சூரியன்&மஷ்ரூம் மசாலா

 காலிஃப்ளவர்   பொடியாக சுத்தம் செய்து நறுக்கின காலிஃப்ளவர்- ஒரு சுப், மிளகுப்பொடி அடீஸ்பூன், சோளமாவு (காரின்ஃப்ளேவர்}-2 டேபின் ஸ்பூன், மைதா மாவு-2 டேபிள்ஸ்பூன், அஜினமோட்டோ-ஃடீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க, உப்பு-தேவையான அளவு. செய்முறை: காலி ஃப்ளவரை உப்பு போட்டு ஒரு வேக்காடு வேகவைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதாமாவு இரண்டையும் திக்காக கரைத்துக்கொள்ளவும். இந்த மாவுக் கலவையில் வேக வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பிசறி வைத்துக் கொண்டு சுடாயில் எண்ணெய் ஊற்றி, பிசறி வைத்த காலிஃப்ளவரைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கிரேவி தயாரிக்கத் தேவையான பொருட்கள்: வெங்காயம்-1, குடைமிளகாய்-1, மிளகுப்பொடி- டீஸ்பூன், அஜினமோட்டோ - டீஸ்பூன், சோளமாவு (கார்ன் ஃப்ளேவர்)-2 டேபிள் ஸ்பூன், வெங்காயம்-1, உப்பு-தேவையாள அளவு, எண்ணெய் வதக்கத் தேவையான அளவு. கிரேவி செய்முறை: வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாயை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் உப்பு, மிளகுப்பொடி போட்டு, சோளமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்த...

கேரளா ஸ்பெஷல் இலை அடை | பாரம்பரிய பண்டிகை இனிப்பு ரெசிபி & கேரளா உன்னியப்பம் ரெசிபி | சுவையான வெல்லம் பனியாரம் செய்வது எப்படி?

  இலை அடை  தேங்காய் மற்றும் வெல்லப்பாகு கலந்த சுவையான பூரணத்துடன், ஆரோக்கியம் தரும் வாழை இலை கொண்டு தயாரிக்கப்படும் கேரளாவின் பாரம்பரிய பண்டிகை உணவான இலை அடை தித்திக்கும் சுவை கொண்டது! தேவையானவை: பாரிஸின் தூள் வெல்லம் - முக்கால் கப், நெய் 2 டீஸ்பூன், தேங்காய்த்துருவல் 1 نه ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 1 கப், தண்ணீர் ஒன்றரை கப், உப்பு - அரை டீஸ்பூன். இலை அடை செய்முறை: கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, பாரிஸின் தூள் வெல்லம் மற்றும் தேங்காய்த்துருவல் போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும். வெல்லத்தூள் நன்றாகக் கரைந்ததும், தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியான பிறகு சிறிதளவு ஏலக்காய்த்தூளை சேர்த்து, பூரணத்தை தயார் செய்துகொள்ளவும். மேல் மாவு தயாரிக்க: அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் அரிசி மாவை வறுத்து ஆறவைக்கவும். கடாயில் தண்ணீர், நெய், உப்பு கலந்து சூடாக்கவும். சூடான தண்ணீரை வறுத்த அரிசி மாவில் ஊற்றியபடி ஸ்பூன் கொண்டு கலக்கி, கொழுக்கட்டை மாவுப் பதத்தில்,கையில் ஒட்டாதபடி மாவை தயார் செய்யவும். வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி, லேசான தீயில் காட்டி சூட...